tamilnadu

img

திரிபுரா சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு-சிபிஎம் முன்னேற்றம்

அகர்தலா, செப்.27- திரிபுரா மாநிலத்தில் பதர்காட் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் கடுமையான வாக்குச் சரிவை அக்கட்சி சந்தித்துள்ளது. திரிபுராவில் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திலிப் சர்க்கார் இறந்ததையொட்டி இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடந்தது. காவல்துறையை வைத்து கடுமையான மிரட்டல்கள் இருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்குகளைப் பதிவு செய்ய விடாமல் 24 வாக்குச்சாவடிகளில் ஆளும் பாஜக வன்முறையைத் தூண்டியது. வாக்கு எண்ணிக்கையின்போதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருந்தன என்பதும் முறைகேடுகள் நடந்திருந்ததை வெளிப்படுத்தியது.

முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதர்காட் சட்டமன்றத் தொகுதியில் 28 ஆயிரத்து 140 வாக்குகளைப் பெற்றிருந்த பாஜக தற்போது 20 ஆயிரத்து 487 வாக்குகளைப் பெற்றுள்ளது. 58 சதவிகித வாக்குகளிலிருந்து 44 சதவிகித வாக்குகள் என்ற நிலைமைக்கு இறக்கம் கண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 14 சதவிகித வாக்குகள் சரிவு என்பது பாஜக வட்டாரங்களில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் திரிபுரா மாநிலத்தில் மூன்றாம் இடத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தள்ளப்பட்டது என்று முதலாளித்துவ ஊடகங்கள் மகிழ்ச்சியோடு எழுதி வந்தன. அக்கருத்தைத் தகர்க்கும் வகையில் பதர்காட் இடைத்தேர்தல் முடிவு வந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் 9 ஆயிரத்து 733 வாக்குகளைப் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது 15 ஆயிரத்து 211 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 20 சதவிகித வாக்குகளிலிருந்து தற்போது 33 சதவிகித வாக்குகள் என்று முன்னேற்றம் கண்டிருக்கிறது.

முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதர்காட் சட்டமன்றத் தொகுதியில் 28 ஆயிரத்து 140 வாக்குகளைப் பெற்றிருந்த பாஜக தற்போது 20 ஆயிரத்து 487 வாக்குகளைப் பெற்றுள்ளது. 58 சதவிகித வாக்குகளிலிருந்து 44 சதவிகித வாக்குகள் என்ற நிலைமைக்கு இறக்கம் கண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 14 சதவிகித வாக்குகள் சரிவு என்பது பாஜக வட்டாரங்களில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் திரிபுரா மாநிலத்தில் மூன்றாம் இடத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தள்ளப்பட்டது என்று முதலாளித்துவ ஊடகங்கள் மகிழ்ச்சியோடு எழுதி வந்தன. அக்கருத்தைத் தகர்க்கும் வகையில் பதர்காட் இடைத்தேர்தல் முடிவு வந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் 9 ஆயிரத்து 733 வாக்குகளைப் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது 15 ஆயிரத்து 211 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 20 சதவிகித வாக்குகளிலிருந்து தற்போது 33 சதவிகித வாக்குகள் என்று முன்னேற்றம் கண்டிருக்கிறது.

;