tamilnadu

img

மோடியை ஆதரித்து பேசி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய ராஜஸ்தான் ஆளுநர் மீது நடவடிக்கை

தேர்தல் நடத்தை விதிகளை மீறி ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங், மோடியை ஆதரித்து பேசியதை குடியரசு தலைவரின் பார்வைக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

கடந்த மார்ச் 23-ஆம் தேதி ஆலிகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் ராஜஸ்தான் ஆளுநர். அப்போது “மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். அது தான் தற்போது நாட்டுக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று. நாங்கள் அனைவரும் பாஜக தொண்டர்கள். நாங்கள் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்” என்று கூறியுள்ளார். 

இதையொட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எனவே, தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஆளுநர், மோடியை ஆதரித்து பேசியதை குடியரசு தலைவரின் பார்வைக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதே போன்று 1990-ல் இமாச்சல் பிரதேசத்தின் அப்போதைய ஆளுநராக இருந்த குல்ஷெர் அகமத், மத்தியப் பிரதேசத்தில் போட்டியிடும் தன் மகன் சயீத் அகமதிற்கு ஆதரவாக பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து குல்ஷெர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


;