tamilnadu

img

எல்லையில் பதற்றத்தைத் தணித்திடுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

புதுதில்லி, ஜூன் 16- லடாக்கில் இந்தியாவுக்கும் சீனா வுக்கும் இடையேயுள்ள எல்லைக் கட்டுப் பாட்டு கோடு பகுதியில் பதற்றத்தைத் தணித் திடக்கூடிய விதத்தில் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டு பின்வாங்கும் நடை முறையை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி யுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லடாக் பகுதியில் கல்வான் பள்ளத் தாக்கில் உள்ள சீனாவுக்கும் இந்தியா வுக்கும் இடையேயான எல்லைக் கட்டுப் பாட்டு கோடு பகுதியில் (Line of Actual Control) பதற்ற நிலைமை ஏற்பட்டி ருப்பது வருந்தத்தக்கது.

இரு நாடுகளின் உயர் ராணுவ அள விலான அதிகாரிகளிடையே இரு நாடு களுக்கும் இடையே, ஒத்துப் பின்வாங்கும் நடைமுறை குறித்து விவாதிப்பதற்காக ஜூன் 6 அன்று பேச்சுவார்த்தைகள் தொட ங்கிய பின்னர், இது நடந்திருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, இந்திய அதி காரி ஒருவரும், இரு வீரர்களும் இறந்தி ருப்பதற்குத் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதற்றத்தைத் தணிப்பத ற்காக இரு தரப்பின் ராணுவ அதிகாரி களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தப் பேச்சு வார்த்தை அமைதியை நிலைநாட்டுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.   மத்திய அரசாங்கம், அங்கே என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ மான அறிக்கையை வெளியிட வேண்டும். இரு அரசாங்கங்களும் எல்லையில் அமைதி ஏற்படுத்தும் விதத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வின் அடிப் படையில் இருதரப்பினரும் ஒத்துப் பின் வாங்கும் நடைமுறையை மேற்கொண்டு, பதற்றத்தை தணித்திட, உயர்மட்ட அள விலான பேச்சுவார்த்தைகளை உடனடி யாகத் தொடங்குவது மிகவும் முக்கிய மாகும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.   (ந.நி.)