tamilnadu

img

சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்கள் சூறை.... கூட்டாட்சித் தத்துவத்தை அராஜகமாக மீறும் மோடி அரசு!

புதுதில்லி:
கூட்டாட்சித் தத்துவத்தையும், ஜனநாயகத்தையும் மறந்துவிட்டு மோடி அரசுசெயல்படுகிறது; ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு-குறு தொழில் நடத்துவோர் எவர் மீதும் கொஞ்சம் கூட இந்த அரசுக்கு இரக்கமில்லை என்றும்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புநாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், நாட்டின் பொருளாதாரச் சூழல், தொழிலாளர்கள் எதிர்கொள் ளும் பிரச்சனை உள்ளிட்டவை குறித்துஆலோசிப்பதற்கான எதிர்க்கட்சிகளின்கூட்டம், தில்லியில் வெள்ளிக்கிழமையன்று காணொலி காட்சி மூலம் நடை பெற்றது. 22 கட்சிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்திற்குத் தலைமை வகித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:“கூட்டாட்சித் தத்துவம் என்பது நமதுஅரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமான பகுதி. அந்த கூட்டாட்சியின் தத்துவத்தையும், ஜனநாயகத்தையும் மறந்து விட்டு மத்திய அரசு செயல்படுகிறது.  சீர்திருத்த நடவடிக்கை எனும் பெயரில், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனைசெய்கிறது.மத்திய அரசின் அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தை மையமாக வைத்தே உள்ளன. நாடாளுமன்றத்தில் இரு அவைகள் இருக்கின்றன. நிலைக்குழுக்கள் இருக்கின்றன. இவற்றையெல் லாம் மறந்து விட்டு, மோடி அரசு தன் னிச்சையாக திட்டங்களை அறிவிக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கமத்திய அரசு பொதுமுடக்கம் அறிவித்தபோது அதை காங்கிரஸ் கட்சி வரவேற்றது. ஆனால் தொடர்ந்து 4 கட்ட பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டும், அதன் மூலம்கிடைக்கும் பலன் குறைந்து வருகிறது. 21 நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்று மோடி அறிவித்தார். ஆனால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில் கொரோனா வைரஸ் இந்தியாவில்தான் இருக்கும் என்பதுபோல்தான் நிலைமை உள்ளது. அரசுக்கு பொதுமுடக்கம் பற்றியோ, அதனைமுடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவோ தெளிவான திட்டம் இல்லை. 

தற்போது நாட்டின் பொருளாதாரச் சூழல் முடங்கியுள்ளது. உலகின் பல்வேறுபொருளாதார வல்லுநர்களும் உடனடியாக பொருளாதாரத்தைத் தூண்டிவிடும் உதவிகளை அரசு அறிவிக்க வேண்டும்; ஏழைகளுக்கு நேரடியாக பணம் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால், பிரதமர் அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி நிதித் தொகுப்பும், 5 நாட்களாகஅதைப் பிரித்துப் பிரித்து வாசித்த நிதியமைச்சரின் உரையும், நாட்டின் கொடூரமான நகைச்சுவையாக மாறியிருக்கின் றன.புலம்பெயர் தொழிலாளர்களை மட்டுமின்றி, வறுமையில் இருக்கும் 13 கோடி குடும்பங்கள், நிலமில்லா விவசாயிகள், விவசாயக் கூலிகள், சுயதொழில் புரிவோர், சிறு, குறு தொழில்கள் செய்வோர்,அமைப்புசாராத் தொழில்கள் அனைத்தையும் மத்திய அரசு புறக்கணித்து விட்டது. ஏழைகள் மீதும், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கொஞ்சம்கூட கருணையில்லாத அரசாக இருக்கிறது. இவர்களைப்  பாதுகாப்பதற்கு மத்தியஅரசிடம் எந்த திட்டமும் இருப்பதாக தெரியவில்லை.இவ்வாறு சோனியா காந்தி பேசியுள்ளார்.

;