tamilnadu

img

விபத்துக் காப்பீடு என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம்

புதுதில்லி:
கடந்த 2 ஆண்டுகளில் 39 கோடிரூபாயை, ரயில்வே-யிடமிருந்து பிரீமியமாக பெற்றுள்ள தனியார் காப்பீட்டுநிறுவனங்கள், பாதிக்கப்பட்டவர் களுக்கான இழப்பீடாக வெறும் 7 கோடிரூபாயை மட்டுமே வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.மத்திய ரயில்வே துறையின் கீழ்செயல்படும் ‘ஐஆர்சிடிசி’ நிறுவனத்தின்இணையதளம் மூலம் ஆன்லைன் டிக் கெட் முன்பதிவு செய்யும் பணிகளுக்கு ரயில்வே துறையானது காப்பீடு வழங்குகிறது. இந்த காப்பீட்டை ஸ்ரீராம் ஜெனரல், ஐசிஐசிஐ லாம்பார்ட் ஜெனரல், ராயல் சுந்தரம் ஜெனரல் ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் அளித்து வருகின்றன.கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட பயணிகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், டிக்கெட் முன்பதிவு செய்து,ஏஆர்சி அல்லது டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணி ஒருவருக்கு அவரின் டிக்கெட் கட்டணத்தில் காப்பீட்டுக்காக 92 காசுகள் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. 

இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து,ரயிலில் பயணிக்கும் பயணிகள், ரயில்விபத்தில் சிக்கி இறந்தால் ரூ. 10 லட்சம், படுகாயம் அடைந்தால் அல்லது உறுப்புஇழப்புக்கு ஆளானால் ரூ. 7.5 லட்சம்இழப்பீடாக வழங்கப்படும். லேசான காயம் அடையும் பயணிக்கு ரூ. 2 லட்சம்மருத்துவச் செலவாக வழங்கப்படும். அதோடு ரயிலில் நடைபெறும் கொள்ளை, வன்முறை, தீ விபத்துக்கள் போன்றவற்றில் பாதிக்கப்படும் பயணிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம்இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் மத்திய ரயில்வே துறையானது, எவ்வளவு தொகையை பிரீமியமாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள் ளது; அதேபோல, காப்பீட்டு நிறுவனங்களால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை எவ்வளவு? என்று மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திரசேகர் கவுர்என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு ரயில்வே தற்போது பதிலளித்துள்ளது. அதில், “கடந்த 2 ஆண்டுகளில், தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ. 38 கோடியே 89 லட்சம் பிரீமியமாக செலுத்தப்பட்டுள்ளது; அதேநேரம் இழப்பீடாக பயணிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 7 கோடியே 29 லட்சம்மட்டுமே தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விபத்துக்கள் குறைந்ததே காரணம் என்றும், 2013-14ல் 118 ரயில் விபத்துக்கள் நடந்த நிலையில், 2016-17இல் 104 ஆகவும், 2017-18இல் 73 ஆகவும், 2018-19இல் 59 ஆகவும் விபத்துக்கள்குறைந்து விட்டது என்றும் புள்ளிவிவரம் அளித்துள்ளது. அதாவது, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நான்கில் ஒருபங்கு மட்டுமே இழப்பீடாக வழங்கிவிட்டு, மூன்று பங்குஅளவிற்கு கொள்ளை லாபம் பார்த் துள்ளன. இதையடுத்து, பயணிகளிடம் வசூலிக்கும் காப்பீட்டுக்கான பிரிமியத் தொகையை குறைக்க வேண்டும் என்றுகோரிக்கைகள் எழுந்துள்ளன.

;