tamilnadu

img

போலீஸ் போலி என்கவுண்ட்டர் கொலைகளை அனுமதிக்க முடியாது

புதுதில்லி:
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தைப்போன்று போலீஸ் போலி என்கவுண்டர் கொலைகளை அனுமதிக்க முடியாது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறியுள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ள போலி என்கவுண்டர் கொலைகள் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

சமீபத்தில் நாட்டில் நடைபெற்றுள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதானபாலியல் வன்புணர்வு மற்றும் கொலை அல்லது கொலை செய்ய முயற்சி நடவடிக்கைகள் மீது காவல்துறையினரும், நிர்வாகமும் செயல்படும் தன்மை அல்லது செயல்படா தன்மை- இது போன்ற வழக்குகளில் நாட்டில் நீதிபரிபாலன அமைப்புமுற்றிலுமாகத் தோல்வி அடைந்திருப்பதையே காட்டுகின்றன. எனவே இதனை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்வில்பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் மிகவும் துணிச்சலுடன் வழக்குதொடுக்க முயன்றபோது அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. பெண் ஒருவரை எரித்தகயவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறான். இவ்வழக்கில் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அளித்திட காவல்துறையினரால் முடியவில்லை.தெலுங்கானா மாநிலத்தில் மிகவும் கொடூரமான முறையில் கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட டாக்டர் பிரியங்கா ரெட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும், அந்த வழக்கின் புலன் விசாரணையும், நீதித்துறை நடைமுறையும் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே ‘போலீஸ்  என்கவுண்டர் மூலமாகக்’ கொல்லப்பட்டிருக்கிறார்கள். டாக்டர் பிரியங்கா ரெட்டி காணவில்லை என்றுஅவர்தம் குடும்பத்தார் காவல்துறையினரிடம் புகார் அளித்தபோது, காவல்துறையினர் அவர்களுடன் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றே நாங்கள் அறிகிறோம். ஒரு பக்கத்தில் பாலியல் வன்புணர்வுக் குற்றத்தைச் செய்திட்ட கயவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று செல்வாக்கான நபர்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ள அதே சமயத்தில், மறு பக்கத்தில் நீதிபரிபாலன நடைமுறை துவங்கப்படுவதற்கு முன்பே குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்கவுண்டர் மூலமாகக் கொல்லப்பட்டதைப் பார்க்கும்போது, காவல்துறையினரும் நிர்வாகமும் தங்கள் கடமைகளை முறையாகச் செய்திடாமல் கிரிமினல் தனமான முறையில் உதாசீனம் செய்திருப்பதை பொது மக்களிடமிருந்துவஞ்சகமானமுறையில் திசைதிருப்புவதற்காகவே என்கவுண்டர் மேற்கொள்ளப்பட்டதோ என்றே நாங்கள் உணர்கிறோம். 

இதுபோன்றவை தொடர்ந்தால், பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களும், அவற்றைப் புரிந்திட்டவர்கள் தண்டனை பெறுவது மிகவும் குறைந்த விகிதத்தில் இருப்பதும் தொடரும்.எனவே, நம் நீதிபரிபாலன அமைப்புமுறையை வலுப்படுத்தும் விதத்திலும்,பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர்களுக்கு முறையான பாதுகாப்பும் கவனமும்அளிக்கப்படுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையினரின் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு சுயேச்சையான ஏஜென்சி மூலமாக முழுமையான புலன் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறியுள்ளது.

இந்திய மாதர்  தேசிய சம்மேளனம் கண்டனம்
இதே போன்றே இந்திய மாதர் தேசியசம்மேளனமும் என்கவுண்டர் கொலைகளைக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றஞ்சாட்டப்பட்ட கயவர்களுக்கு எதிராக நீதித்துறைதான் நீதி வழங்க வேண்டுமேயொழிய அதனைக் காவல்துறை செய்திடக் கூடாது. காவல்துறையினரின் என்கவுண்ட்டர் கொலைகளால் நீதியை உத்தரவாதப்படுத்திட முடியாது. இந்த விஷயம் தொடர்பாக ஓர் உயர்மட்ட  அளவிலான குழு  உடனடியாக அமைக்கப்பட்டு, பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட அதிகாரிகள் மீது புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் விசாரணைமுடியும் வரை அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்கள்.(ந.நி.)

;