tamilnadu

img

பிரதமரின் அன்னயோஜனா திட்ட அரிசி

குடும்ப அட்டைகளுக்கு முழுமையாக வழங்குக!

தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகளில் வழங்க வுள்ள அரிசியை சம்பந்தப்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 

முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:

பார்வை: 1. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடித எண். ந.க.எண். இ2 /8088/2020, நாள். 15.4.2020. (இரண்டு கடிதங்கள்).

2. மத்திய அரசின் விழிப்புணர்வு உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம் எண்.7-1/2019(II)-BP.III, நாள் 30.03.2020.

3. குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்க சென்னை உயர்நீதி மன்றத்தின் 3.4.2020 தேதியிட்ட  தீர்ப்பு (W.P.No. 7423 of 2020).

பார்வையில் குறிப்பிட்டுள்ள கடிதம் அடிப்படை யில் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கும், (PHH) அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கும் (PHHAYY) மத்திய அரசி னுடைய தொகுப்பிலிருந்து 2020 ஆம் ஆண்டிற்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களது குடும்பத்தில் நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி வழங் கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு குடும்பத்தில் இருவர் இருந்தால் பத்து கிலோ அரிசியும், மூன்று பேர் இருந்தால் 15 கிலோ அரிசி யும், நான்கு பேர் இருந்தால் 20 கிலோ அரிசியும் வழங்கப்பட வேண்டும். எனவே மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த அரிசி முழுவதை யும் ஊரடங்கு நீட்டிப்பின் காரணமாக வாழ்வாதார மின்றி தவிக்கும்  சம்பந்தப்பட்டுள்ள பயனாளி களுக்கு கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். 

பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி 2020 ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த அரிசி வழங்கப்படவில்லை. எனவே, பார்வையில் குறிப் பிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல் ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்குள் மத்திய அரசு ஒதுக்கியுள்ள அரிசியை சம்பந்தப்பட்ட பய னாளிகளுக்கு  வழங்க வேண்டும்.

தமிழகத்தில் குடும்ப அட்டைக்கு விண்ணப் பித்து இன்னும் அட்டை கிடைக்காதவர்கள் மாநி லம் முழுவதும் உள்ளனர். இவர்கள் ஏப்ரல் மாதம் பெறவேண்டிய அத்தியாவசியப் பொருட்களும் ஆயிரம் ரூபாயும் பெறமுடியாமல் தவிக்கின்றனர். அதேபோன்று ஊர் மாறுதலுக்காக விண்ணப் பித்தவர்களும் உணவுப் பொருட்கள் பெற முடி யாத நிலையில் உள்ளனர். 

இந்நிலையில், சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் டாக்டர் வினித் கோத்தாரி மற்றும்  ஆர் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு நீதிமன்றம்,  3.4.2020 அன்று குடும்ப அட்டை இல்லாத முறைசாரா தொழிலாளர்களுக்கும்,  புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், அவர்களது ஆதார் எண் அடிப்படையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. எனவே,  குடும்ப அட்டை இல்லாத அனைவருக்கும் அவர்களது ஆதார் எண் அடிப்படையில் மாநில அரசு வழங்குகின்ற அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை ஆகிய வற்றை வழங்க தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி யிருந்தோம். இன்னும் சில இடங்களில் பருப்பு இல்லை, சில இடங்களில் பாமாயில் இல்லை, சில இடங்களில் அரிசி இல்லை என்கிற தக வல்கள் வருகின்றன. எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரிய அத்தி யாவசியப் பொருட்களை தவறாமல் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மார்ச் மாதம் உணவுப்பொருள் வாங்காத அட்டைதாரர்கள் ஏப்ரல் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது. ஆனால் பய னாளிகள் தங்களது நியாயவிலைக் கடைக்குச் சென்று கேட்டால் அதற்கான எந்த ஆப்ஷ னும் இயந்திரத்தில் இல்லை என்று நியாய விலைக்கடை ஊழியர் தெரிவிப்பதாக தகவல்கள் வருகின்றன. மார்ச் மாதம் உணவுப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு மார்ச் மாதத்திற்கான உணவுப் பொருட்களை வழங்க தாங்கள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.