tamilnadu

img

நாடாளுமன்றம்: தனிநபர் சட்டமுன்வடிவு விவாதமும் கிடையாது

புதுதில்லி:
நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14 அன்று தொடங்குகிறது. இதில்கேள்வி நேரம் கைவிடப்பட்டிருக்கிறது.

கேள்வி நேரத்தைப் பறித்திருப்பதென்பது “நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மீதான ஆக்கிரமிப்பு” என்றும் அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதற்கு உறுப்பினர்களுக்கு உள்ளஉரிமைகளை மறுப்பதாகும் என்றும் மக்களவைகாங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.கோவிட் 19  வைரஸ் தொற்றைக் காரணம் கூறி,வழக்கமாக வெள்ளியன்று மாலை நடைபெறும் தனிநபர் சட்டமுன்வடிவு தொடர்பான விவாதமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.  கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டிருப்பது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகுறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்தக் கூட்டத்தொடர் அதீதமான சூழ்நிலையில் நடைபெறுவதாகக் கூறினார்.

பூஜ்ய நேரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவர்களையும் கேட்டுக் கொண்டிருப்பதாக, மத்திய நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது ஒதுக்கு
மாறு கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்கும் முதல்நாள் –அதாவது செப்டம்பர்14 அன்று -  மக்களவை காலை 9 மணி முதல்1 மணி வரையிலும், பின்னர் அதற்கு அடுத்தநாட்களில் மாலையில் 3 மணி முதல் 7 மணி வரையிலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று மாநிலங்களவை முதல் நாளன்று மாலை 3 மணி முதல் 7 மணி வரையிலும் அதற்கடுத்த நாட்களில் காலை 9 மணி முதல் 1 மணிவரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.எனினும் மக்களவையில் நாடாளுமன்ற நடத்தை விதிகள் 377ஆவது பிரிவின்கீழ் அவசரப்பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரம் உண்டு.           (ந.நி.)

;