tamilnadu

img

ராணுவத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் பதவி உயர்வு வழங்க உத்தரவு

புதுதில்லி:
ராணுவத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் 3 மாதத்திற்குள் பதவி உயர்வு வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்ததாவது:பெண்களுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்த விதியும் இல்லை. கடந்த காலங்களில் ராணுவத்தில் பணியாற்றிய பெண்கள் நம் நாட்டிற்கு கவுரவத்தை கொண்டு வந்துள்ளனர். ராணுவத்தில் இருக்கும் பாலின பாகுபாடுகள் குறித்த எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.  

ராணுவத்தில் பெண்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக 2010 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எந்தவித தடையும் இல்லாதபோதும், மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கவில்லை. ராணுவத்தில் பெண்கள் பணியாற்றுவது வளர்ச்சியை நோக்கிச் செல்லும் நிலை. எனவே, தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பில் எந்தவொரு தடையும் இல்லாததால், மத்திய பதவி உயர்வை செயல்படுத்த வேண்டும்.   70 ஆண்டுகளை கடந்த வந்துள்ள நாம், இந்திய ராணுவத்தில் பெண் பணியாளர்கள், அதிகாரிகளுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பெண்களின் உளவியல் எல்லைகள் குறித்த புகார் மத்திய அரசின் குற்றம் சுமத்தும் கருத்துக்களாக உள்ளன. ராணுவத்தில் தாங்கள் ஆற்றிய பங்களிப்பின் மூலம் பெண்கள், நம் நாட்டிற்கு கவுரங்களையும், பல பதக்கங்களையும், ஐ.நா.வின் அமைதி விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளனர். உளவியல் ரீதியாக சாட்டப்படும் குற்றங்கள் தவறான போக்கு. எனவே, ராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு அவர்களின் பணிக்காலத்தை கணக்கில் கொள்ளாமல், மூன்று மாதங்களுக்குள் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (பிடிஐ)

;