tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து.

ஜம்மு - காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதும், மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி வைத்திருப்பதும், முற்றிலும் ஜனநாயக விரோதமானது என்று 500க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் குரல் கொடுத்துள்ளனர். இந்த குரலுக்கு மோடி அரசு செவி சாய்க்க வேண்டும். அந்தப் பகுதியில் தகவல் தொடர்பு முழுமையாக ஏற்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு காரணங்களை காட்டி மக்களின் இயல்பான நடமாட்டத்தை தடுக்கக் கூடாது.   

ரிசர்வ் வங்கியிடமிருந்து பறிக்கப்பட்ட ரூ.1.76 லட்சம் கோடியில் ரூ.1.45 கோடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தரப்பட்டுள்ளது. இதில் சாமானிய இந்தியர்களுக்கு எதுவும் இல்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. உள்நாட்டு தேவை அதிகரிக்கப்படவும் இல்லை. மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு உதவியிருக்கிறாரேயன்றி ஏழை- எளிய மக்களை வஞ்சித்திருக்கிறார். மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கவலையைப் பற்றி கவலைப்படுகிறதேயன்றி எளிய மக்கள் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

;