tamilnadu

img

12 ஆண்டுக்குப் பின் நந்திகிராமில் சிபிஎம் அலுவலகம் திறப்பு! மக்கள் உற்சாகம்

கொல்கத்தா, ஏப்.8-

மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் பகுதியில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களின் பேராதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.கடந்த 2007-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் சிங்கூர் நிலமெடுப்பு விஷயத்தை சாக்காக வைத்து, மம்தா கட்சியினரும், மாவோயிஸ்ட் பெயரிலான குண்டர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தினர். அப்போது,நந்திகிராமில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தையும் இடித்துத் தள்ளினர்.அதன்பிறகு, மேற்குவங்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைப் பயன் படுத்திக் கொண்டு, காவல்துறை மற்றும் கூலிப்படை ரவுடிகளை வைத்து, அலுவலகத்தை திறக்க விடாமல் தடுத்து வந்தனர்.இந்நிலையில், நந்திகிராமில் இடிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை, மக்களின்பேராதரவுடன் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தோழர்கள் திறந்தனர். இந்த நிகழ்ச்சி மேற்குவங்க இடதுசாரிகள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.‘மேற்கு வங்கத்தில் மீண்டும் செங்கொடி பறக்கப் போகிறது என்பதற்கான அறிகுறிதான் நந்திகிராம் அலுவலக திறப்பு விழா’ என்று சிபிஎம்தலைவர் ராபின் தேப் தெரிவித்துள் ளார்.

;