tamilnadu

img

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே விமர்சனம் வாய்ச்சவடால் பேர்வழிதான் பிரதமர் மோடி

மும்பை, ஏப்.13-“பிரதமர் நரேந்திர மோடி வேறு யாருமல்ல, அவர் மற்றொரு ஹிட்லர்” என்று ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மராத்தி மற்றும் கொங்கணி மக்களின் புத்தாண்டான ‘குடிபாட்வா’வையொட்டி, மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசியிருப்பதாவது:தற்போது நமது நாட்டுக்கு இரண்டு அபாயங்கள் இருக்கின்றன. ஒன்று அமித்ஷா. மற்றொன்று பிரதமர் மோடி. நமது பிரதமருக்கு வாய்ச்சவடால்தான் பெரிதாக உள்ளது. காரியத்தில் ஒன்றுமில்லை. இண்டர்நெட்டில், மிகப்பெரிய வாய்ச்சவடால் பேர்வழி யார்? என்று தேடினால், மோடியின் பெயர்தான் வருகிறது.பிரதமர் ஆவதற்கு முன்பு, எதையெல்லாம் மோடி எதிர்த்தாரோ, அதையெல்லாம் தற்போது அமல்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஜிஎஸ்டி வரி விதிப்பு. மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம்,ஜிஎஸ்டியால் நான்கரை கோடி மக்கள் வேலையிழந்துள்ளனர். தற்போது தேர்தல்பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் மோடி,பணமதிப்பு நீக்கம் பற்றியும், ஜிஎஸ்டி பற்றியும் வாய் திறப்பதில்லையே ஏன்? என்ன பயம் அவருக்கு? மக்களும் இதுபற்றி தன்னிடம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த தேர்தலில் இந்துக்கள் என்ற ஆயுதத்தை மோடி கையில் எடுத்துள்ளார்.


மகாராஷ்டிராவின் முதல் டிஜிட்டல் கிராமம் தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்றால், அங்கு தற்போது இண்டர்நெட் வசதியே இல்லை. ஏடிஎம்அட்டையும் கிடையாது. ஏடிஎம் அட்டையைத் தேய்க்கும் இயந்திரமும் கிடையாது.எல்லைப்புறம் ராணுவத்தால் பாதுகாக்கப்படும் போது, புல்வாமா தாக்குதல்எவ்வாறு நடந்தது? அவ்வளவு ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள் எங்கிருந்து வந்தன? என்று மோடியை நான் கேட்கிறேன். 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமித்ஷா கூறுகிறார். அவர் துணை விமானியா என்ன? கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை தங்களிடம்இல்லை என்று இந்திய விமானப்படையே,கூறும்போது, பாஜக-விற்கு மட்டும் இந்தஎண்ணிக்கை எப்படி கிடைத்தது? இதற் கெல்லாம் மோடி பதில் சொல்வதில்லை. கடந்த 5 ஆண்டுகளாக ஊடகங்களின் ஒருகேள்வியைக் கூட மோடி எதிர்கொண்டதில்லை. கேள்விகள் என்றாலே மோடி பயப்படுகிறார். மோடிக்கு மக்கள் இனி வாய்ப்பளிக்கவே கூடாது. விரைவில் மோடி ஆட்சிஇல்லாத புத்தாண்டு கிடைக்க, குடி பாட்வா நாளில் மராத்திய மக்களை வாழ்த்துகிறேன்.இவ்வாறு ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.

;