tamilnadu

எல்லையில் ஊடுருவல் இல்லை  மத்திய இணை அமைச்சர் பதில்

புதுதில்லி:
கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார். 

கடந்த ஆறு மாதங்களில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து ஊடுருவல் வழக்குகள் அதிகரித்துள்ளன என்பது உண்மையா என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அவர் அளித்த பதிலில், பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் ஊடுருவல்  சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், நான்கு பேர் மார்ச் மாதத்தில், ஏப்ரல் மாதம் 24, மே மாதம் 8 மற்றும் ஜூலை மாதம் 11 பேர் ஊடுருவிதோல்வி அடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் நிகழவில்லை என்று தெரிவித்தார்.

;