tamilnadu

img

‘தற்சார்பு இந்தியா’வுக்கு புதிய விளக்கமளித்த கோயல்...

புதுதில்லி:
“ஆத்மநிர்பார் பாரத் அபியான்” என்ற பெயரில் தற்சார்பு பொருளாதாரத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.அந்த தற்சார்பு பொருளா தாரத்தில் என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5 நாட்களாக ஊடகங்கள் முன்பு தோன்றி விளக்கினார். 

மிச்சமிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும், இது வரை தனியார் முதலீடு அனு மதிக்கப்படாத அணுசக்தி, விஞ்ஞானம், ராணுவம் உள்ளிட்ட துறைகளை மொத்தமாக கார்ப்பரேட் முதலாளிகளிடம் விட்டுவிடுவதுதான் தற்சார்பு பொருளாதாரம் என்பதாக அவர் அளித்த விளக்கம் இருந்தது.இந்நிலையில், “தற்சார்பு இந்தியா என்பது உள்நாட்டினரை மட்டும் கருத்தில் கொண்டதோ அல்லது வெளிநாட்டினருக்கு எதிரானதோ அல்ல!” என்று, மத்திய தொழில் வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.“நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டதாக, அனைத்துப் பகுதிகளின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதற்கான நம்பிக்கையை உருவாக்குவதாக, தற்சார்பு நிலையை உருவாக்குவதற்கான கோட்பாடாக இது இருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

;