tamilnadu

img

தேசிய செய்திகள்...  7-ஆவது இடத்திற்கு இறங்கிய அம்பானி...

மீன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக அமைச்சராக இருப்பவர் ரேகா ஆர்யா. இவர், உத்தரப்பிரதேசத்தின் பரேலியிலு ள்ள தனது பண்ணை வீட்டில் குளம் ஒன்றை அமைத்து, அதில் மீன்களை விட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குளத்தில் தண்ணீரும் இல்லை; 30 ஆயிரம் மீன்களும் திருடு போய்விட்டன என்று போலீசில் புகார்அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரிக்கஉ.பி. பாஜக அரசு தனிப்படை அமைத்துள்ளது.

7-ஆவது இடத்திற்கு இறங்கிய அம்பானி!
உலகப் பணக்காரர்கள் பட்டியலில், இந்திய பெருமுதலாளியான முகேஷ்அம்பானி 78.3 பில்லியன் சொத்துமதிப்புடன் 2 வாரங்களுக்கு முன் 5-ஆவது இடத்திற்கு முன்னேறி இருந்தார். தற்போது மீண்டும் அவர் 7-ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளார். 79.5 பில்லியன் டாலர்சொத்துமதிப்புடன் வாரென் பபெட் ஐந்தாம்இடத்திற்கும், 78.6 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் எலான்மஸ்க் ஆறாவது இடத்திற்கும் முன்னேறி யுள்ளனர்.

சொந்த மாநிலத்தவருக்கு மட்டுமே அரசு வேலை..!
ஆந்திர மாநிலத்தில் அனைத்து தொழில்துறை வேலைவாய்ப்புகளிலும் 75 சதவிகிதம் சொந்த மாநில மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ம.பி. மாநிலத்தில் இனி அரசு வேலைகள் அனைத்தும், ம.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே என்று அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் அறிவித்துள்ளார்.

வேளாண் பொருள் ஏற்றுமதி 24 சதவிகிதம் அதிகரிப்பு!
இந்தியா, 2019-ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில், ரூ. 20 ஆயிரத்து 734 கோடியே 80 லட்சம் அளவிற்கே வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்திருந்தது. இந்நிலையில், நடப்பு 2020-ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில், 23.24 சதவிகிதம் அதிகமாக- ரூ. 25 ஆயிரத்து 552 கோடியே 70 லட்சம் மதிப்பிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்து, சாதனைபடைத்துள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

;