tamilnadu

img

தபோல்கர் கொலைத் துப்பாக்கி அரபிக் கடலில் மீட்பு!

புதுதில்லி:
நரேந்திர தபோல்கரை கொலை செய்வதற்குப் பயன் படுத்தப்பட்ட துப்பாக்கி, அரபிக்கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.பகுத்தறிவாளரும், சமூக செயற்பாட்டாளருமான நரேந்திர தபோல்கர், கடந்த 2013 ஆகஸ்ட்மாதம், புனே நகரில், சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படுகொலையில், காது-மூக்கு மற்றும்தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணர் வீரேந்திர ததே, சஞ்சீவ் புனாலேகர், விக்ரம் பாவே, ஷரத்கலாஸ்கர் மற்றும் சச்சின் அண்டூர்உள்ளிட்ட இந்துத்துவா பயங்கரவாதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தபோல்கர் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியை அரபிக்கடலில் இருந்து சிபிஐ கண்டுபிடித்துள்ளது. நவீன தொழில்நுட் பத்தைப் பயன்படுத்தியும் நார்வேயைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் உதவியுடனும் துப்பாக்கியை மீட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.கைப்பற்றப்பட்டுள்ள துப்பாக்கி, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு, அது தபோல்கரின் உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள துப்பாக்கிக் குண்டின்அளவு, அதன் ரகம் ஆகியவற்றோடு ஒப்பிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;