tamilnadu

img

என் குடும்பமே போராடுகிறது... நான் பெருமைப்படுகிறேன்... காங். தலைவர் அஜய் மக்கான் பேச்சு

புதுதில்லி:
மோடி அரசிடமிருந்து நாட்டைக்காக்கும் போராட்டத்தில், தனது குடும்பமே இறங்கியிருப்பதாகவும், அதற்காக பெருமைப்படுவ தாகவும் காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் கூறியுள்ளார்.குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக வியாழ னன்று தில்லி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. இடதுசாரி கட்சித் தலை வர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத், து.ராஜா, நிலோத்பால் பாசு, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அஜய் மக்கான், சந்தீப் தீக்சித், சமூகசெயற்பாட்டாளர்கள் யோகேந்திர யாதவ், உமர்காலித் ஆகியோர் செங்கோட்டை மற்றும் மண்டி ஹவுஸ் அருகே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அஜய் மக்கான் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.“எனது தாத்தா, கொள்ளுத் தாத்தா ஆகிய இரண்டு பேருமே விடுதலைப் போராட்ட வீரர்கள் என்பதால், பிரிட்டிஷாரால் அவர்கள் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று குடியுரிமைச் சட்டத்திலிருந்து இந்திய மக்களின் சுதந்திரத்தைக் காக்க, என் மனைவி, மகள் ஆகியோர் துணிச்சலுடன் போராடியுள்ளனர். அவர்கள் காவல்துறையினரால், ஒரு பேருந்தில் அடைக்கப்பட்டு ஏற்றிச்செல்லப்பட்டபோது, ஒரு அநீதியான ஆட்சியை எதிர்த்த மனநிறைவை முகத்தில் காட்டியபடி சென்றுள்ளனர். அதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்” என்று அந்த பதிவில் அஜய் மக்கான் கூறியுள்ளார்.

;