tamilnadu

img

முஸ்லிம்களாவது கல்லறையை காட்டுவார்கள்.. இந்துக்கள்..?

மூதாதையர் குறித்த ஆதாரத்திற்கு எங்கே போவது?

மும்பை, ஜன.21- சிஏஏ, என்ஆர்சி சட்டங் கள், முஸ்லிம்களை விட இந்துக் களுக்கே எதிரானது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர மாநில வீட்டு வசதித் துறை அமைச்சரு மான ஜிதேந்திரா அவாத் கூறி யுள்ளார். சிஏஏ, என்ஆர்சி சட்டங் கள் கேட்கும் ஆதாரங்க ளுக்கு முஸ்லிம்கள்கூட தங் கள் மூதாதையரின் கல்லறை யைக் காண்பிப்பார்கள், ஆனால் ஒரு இந்துவால் அவரது தாத்தாவின் கடைசி சடங்கு கள் எங்கு நடந்தன என்பதை யாவது சொல்ல முடியுமா? என்றும் ஜிதேந்திரா அவாத் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், தற் போதைய அமைச்சருமான அசோக் சவானும் இதே கருத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.  “காங்கிரஸ்- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கூட் டணி ஆட்சியில் இருக்கும் வரை மகாராஷ்டிராவில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப் பட மாட்டாது” என்று தெளிவு படுத்தியுள்ள அசோக் சவான், “அம்பேத்கர் வழங் கிய அரசியலமைப்பிற்கு எதிராக எந்த அரசாங்கமும் செல்ல முடியாது; அது தில்லி யானாலும், மும்பையானா லும்..” என்று கூறியுள்ளார். மேலும், “நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும், உருவாக்கப்பட வேண்டிய சட்டமும் அந்த அரசியல மைப்புக்கு உட்பட்டே இருக்க வேண்டும்” என்றும் சவான் குறிப்பிட்டுள்ளார்.
 

;