tamilnadu

img

பன்முகக் கலாச்சாரமே இந்தியாவின் அடையாளம்... ‘சுதர்ஷன் டிவி’ வழக்கில் சந்திரசூட் அமர்வு அதிரடி

புதுதில்லி:
அண்மையில் வெளியான ‘சிவில் சர்வீசஸ் தேர்வு’ முடிவுகளில், முஸ்லிம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பதாகவும், இது ‘யுபிஎஸ்சியில் முஸ்லிம்களின் ஊடுருவல்’ போல தெரிவதாக, இந்துத்துவா பேர்வழியும் ‘சுதர்ஷன் டிவி’ என்ற செய்திச்சேனல் நடத்தி வருபவருமான சுரேஷ் சவ்ஹான்கே அவதூறு பரப்பி இருந்தார்.

இதுதொடர்பான வழக்கு நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வுமுன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சிவில் சர்வீஸில் ‘ஜாமியா கே ஜிஹாதி’ என்று‘சுதர்ஷன் டிவி’ கூறியதைக் கண்டித்த உச்சநீதிமன்றம், ஒரு சமூகத்தினர் சிவில் சர்வீஸூக்குள் நுழைவது பற்றிய இந்த தொலைக்காட்சி (சுதர்ஷன் டிவி) விவாதநிகழ்ச்சியே ஒரு நயவஞ்சகமான வெறிச்செயல் என்று சாடியது.

இந்த நிகழ்வின் நோக்கமே இஸ்லாமியர்களைச் சிறுமைப் படுத்துவதாகத்தான் உள்ளது. இதுபோலக் குறிப்பிட்ட இனத்தவரைத் தவறாகச் சித்தரிப்பதை கருத்துச் சுதந்திரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியது.அப்போது, சுரேஷ் சவ்ஹான்கேவை பாதுகாக்கும் வகையில் பேசிய மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பத்திரிகை சுதந்திரம் என்பது உச்சபட்சமானது, எனவே அதைக்கட்டுப்படுத்துவது ஜனநாயக விரோதம்” என்றார்.அதேபோல, ‘சுதர்ஷன் டிவி’தரப்பில் ஆஜரான முத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், அந்த குறிப்பிட்ட ‘சுதர்ஷன் டிவி’ நிகழ்ச்சியே,தேசியப் பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு நிகழ்ச்சிதான் என்று சமாளித்தார்.இதனை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, கே.எம். ஜோசப் அமர்வு “உங்கள் கட்சிக்காரர் தேசத்துக்கு சேவை புரியவில்லை, மாறாக, தேசத்துக்கு கேடுதான் விளைவிக்கிறார்” என்று கடுமை காட்டியதுடன், “இந்தியா, பன்முகப் பண்பாடு கொண்ட தேசம்” என்பதையே சுரேஷ் சவ்ஹான்கே மறுப்பதாகவும், எனவே ‘சுதர்ஷன் டிவி’தனது சுதந்திரத்தை பொறுப்புடன் கையாள்வது நல்லது என் றும் எச்சரிக்கை விடுத்தனர்.இந்த வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

;