tamilnadu

img

எரிவாயு சிலிண்டர் மானியத்தை நிறுத்த மோடி அரசு திட்டம்.. மாதத்தோறும் ரூ. 10 விலை உயரும்

புதுதில்லி:
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானி யத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் நிறுத்தி விடுவதென, மோடி அரசு முடிவு செய்துள்ள நிலையில்,அதற்கான முயற்சிகளை தற்போது துவங்கியுள்ளது.அதாவது, மானியத்தை ரத்து செய்யும் விதமாக, எண்ணெய்நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் இழப்பை சிலிண்டர் விலையை உயர்த்தி - குறைத்துக் கொள்ள அனுமதி அளிப்பது பற்றி ஆலோசனையில் இறங்கியுள்ளது.“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது; இந்த விலைக் குறைவை அரசு பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது; அதாவது,  எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக, எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்திற்கு ரூ. 10 விலை உயர்த்த தீர்மானித்துள்ளது” என்று எண்ணெய் நிறு வன வட்டாரங்கள் கூறுகின்றன.

இதன்படி அடுத்த ஓராண்டிற்குள் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ரூ. 150 வரை விலை உயரும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுதோறும் மானிய விலையில் 12 சிலிண்டர்களை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. மானியத்துடனான ஒரு சிலிண்டரின் விலை 544 ரூபாயாக உள்ளது. ஒவ்வொரு சிலிண்டருக்கும் 190 ரூபாய் மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது.  கடந்த ஜூலை முதல் ஜனவரி மாதம் வரை மானிய சிலிண்டரின் விலை 63 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, சர்வதேச அளவில்கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆகவே, இதனைப் பயன்படுத்தி, ஒவ்வொரு மாதமும் 10 ரூபாய் விகிதம் உயர்த்தி, 2022-ஆம் ஆண்டில் மானியத்தை முற்றிலும் கைவிடுவதுதான் மத்திய அரசின் திட்டம். இதற்கான அனுமதியை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு விரைவில் வழங்கும்என்று கூறப்படுகிறது.

;