tamilnadu

img

மோடி அரசு பொய் சொல்லி எங்களை ஏமாற்றி விட்டது... ‘ஏர் இந்தியா’ ஊழியர்கள் குற்றச்சாட்டு

புதுதில்லி:
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ஊதியம் தொடர்பான நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அதன் ஊழியர்கள்கொந்தளித்துள்ளனர்.

பொதுத்துறை நிறுவனமான ‘ஏர்இந்தியா’ விரைவில் தனியாருக்குவிற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதன் ஊழியர்கள் தொடர் பான முடிவுகளை எடுப்பதற்கான முழு அதிகாரத்தையும், ‘ஏர் இந்தியா’தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜிவ் பன்சாலுக்கு, மோடி அரசு வழங்கியது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, ‘ஏர் இந்தியா’ ஊழியர்களை6 மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை, சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் அனுப்பும் திட்டத்தை ராஜிவ் பன்சால் கையில் எடுத்துள்ளார். இது தற்போது ஊழியர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் ‘ஏர் இந்தியா’ ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், முதன்மை மேலாண்மை இயக்குநருக்கு, கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.

அதில், “ஊதியம் இல்லாமல் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கும் திட்டம் குறித்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; இது கடுமையான நடவடிக்கை” என கூறியுள்ள ஊழியர்கள், “ஊதிய ஒப்பந்தத்துக்கு எதிராக இந்த நடவடிக்கை இருப்பதால் இது அரசியல்அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளனர்.‘ஏர் இந்தியா’ தனியார் மயமாக்கப்பட்டால் அதன் ஊழியர் களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பணி உறுதி வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் அதற்கு முன்னரே ஊழியர்களின் எதிர்காலத்தை தற்போது கேள் விக்குறியாக்கி விட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

;