கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு, மோடிஅரசின் தவறான கையாளுதலும், மூர்க்கத்தனமாக பொதுமுடக்கமுமே காரணம்என்று சிவசேனா-வின், ‘சாம்னா’ பத்திரிகை சாடியுள்ளது. மேலும், தற்போதுநாட்டில் நிதிச்சிக்கல் ஏற் பட்டுள்ள நிலையில், அதனை மாநில அரசின் மீது சுமத்தி, நெருக்கடியில் இருந்து தங்களை கைகழுவிக் கொள்ளமுயற்சிக்கிறது என்றும் ‘சாம்னா’ குற்றம் சாட்டியுள் ளது. நாட்டின் 22 சதவிகித வருவாய் மும்பையிலிருந்து செல்கிறது. ஆனால், மோடி அரசு அதனை மகாராஷ்டிராவிற்கு பகிர்ந்து அளிப்பதில்லை எனவும் சாடியுள்ளது.