tamilnadu

img

மோடி அரசின் புத்தாண்டு பரிசு? ரயில் கட்டணங்கள் உயருகின்றன..

புதுதில்லி:
நாடு முழுவதும் இயங்கும் பல்வேறு பயணிகள் ரயில்களின் அனைத்து பிரிவுகளிலும் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அண்மையில் கூடியபோது, இந்திய ரயில்வேயின் 8 சேவைகளை ஒன்றாக இணைத்து ‘இந்திய ரயில்வே மேலாண்மை நிறுவனம்’ (ஐ.ஆர்.எம்.எஸ்.) என்ற ஒரே நிறுவனமாக மாற்ற ஒப்புதல் வழங்கியது. 

அப்போது ரயில்வே கட்டணங்களை உயர்த்துவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் ரயில்வே அமைச்சகம் உயர்த்தப்படும் கட்டணங்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த திட்டத்தின்படி, ஏசி, ஸ்லீப்பர் மற்றும் ஜெனரல் கிளாஸின் கட்டணம் அதிகரிக்கும், அத்துடன் மாதாந்திர ரயில்வே பயன அட்டை (Railyway Pass) கட்டணமும் அதிகரிக்கப்பட்ட உள்ளது. இருப்பினும், எவ்வளவு கட்டணங்களை உயர்த்தலாம் என்பது குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.எனினும் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் முதல் அதிகபட்சம் 20 சதவிகிதம் வரை - அதாவது ஒரு கிலோமீட்டருக்கு 5 முதல் 40 பைசா வரை கட்டணங்கள் அதிகரிக்கலாம். இது அடுத்தவாரம் (புத்தாண்டு முதல்) இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வரலாம் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவும், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை சூசகமாக தெரிவித்துள்ளார்.“ரயில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவற்றை நெறிப்படுத்த உள்ளோம். கட்டணத்தை உயர்த்துவது என்பது மிகவும் தீவிரமான விஷயம்.  இப்போது அதனை வெளிப்படையாக கூற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, ரயில்வேயின் சரக்கு கையாளுதல் மூலமான வருவாய் ரூ. 19 ஆயிரத்து 412 கோடியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டின் 2-வது காலாண்டை எடுத்துக் கொண்டாலும், முந்தைய காலாண்டைக் காட்டிலும் வருவாய் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பயணிகள் கட்டணம் மூலமான வருவாய் ரூ. 155 கோடியும், சரக்கு கட்டண வருவாய் ரூ. 3 ஆயிரத்து 901 கோடி குறைந்துள்ளது.இதன்காரணமாகவே ரயில்வே கட்டணங்களை சுமார் 20 சதவிகிதம் அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

;