tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளர் துயரம் மனவேதனை தருகிறது....

புதுதில்லி:
புலம்பெயர் தொழிலாளர்கள், நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வது மன வேதனை அளிப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.தாங்கள் சொந்த ஊர் திரும்ப ரயில் மற்றும் பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவார்கள் என்று, மத்திய - மாநிலஅரசுகளை எதிர்பார்த்து, காத்திருந்து - களைப்படைந்து போன புலம்பெயர் தொழிலாளர்கள், தற்போது கால்நடையாகவே சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இணையதளம் ஒன்றில் உரையாற்றியுள்ளார்.

அதில், “நடந்து செல்லும் தொழிலாளர்களில் பலருக்கு கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களிடம் உணவு கிடையாது. சிலர் தங் கள் குழந்தைகளை தோளில் சுமந்து செல்கின்றனர். ஒருவர் தனது தாயை சுமந்து செல்வதை நான் பார்த்தேன். இது மன வேதனை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், “புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே அவர்கள் தயவுசெய்து தில்லியை விட்டுச் செல்லவேண்டாம். இங்கு ஊரடங்கு நீண்ட காலத்துக்கு இருக்காது. நிலைமை விரைவில் சீரடையும்” என் றும் குறிப்பிட்டுள்ளார்.

;