tamilnadu

img

முப்படைகளுக்கான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும்... பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு

புதுதில்லி:
முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 9 காலை 10 மணிக்கு அடுத்தடுத்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அந்த டிவிட்டர் பதிவுகளில், இந்தியஅரசு பாதுகாப்புத்துறையில் சுயசார்புஅடைவதற்கான பல்வேறு முடிவுகள்எடுக்கப்பட்டிருப்பதாகவும்  சுயசார்புதிட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, 101 வகையான பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என்றும் நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு மூலதன கொள்முதல் திட்டத்திற்காக  சுமார் 52,000 கோடி ரூபாயில் ஒரு தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்  உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில்இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

;