tamilnadu

img

புதிதாக 13 கிறிஸ்தவ என்.ஜி.ஓக்களின் உரிமம் ரத்து... உள்துறை அமைச்சகம் தீவிரம்

புதுதில்லி:
கடந்த பிப்ரவரி மாதம் 4 கிறிஸ்தவ என்ஜிஓ-க்களின் உரிமத்தை ரத்து செய்த மோடி அரசு தற்போது மேலும்13 என்ஜிஓ-க்களின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.இந்தியாவில் கல்வி, பெண் கள் மேம்பாடு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் களுக்கான இல்லங்கள் நடத்துதல், மனித உரிமைகள் பாதுகாப்பு என பல்வேறு செயற்பாடுகளில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங் கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் சில நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்றும் இயங்கி வந்தன.

இந்நிலையில், 2014-ஆம்ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தநிறுவனங்கள் மதமாற்றத்தில்ஈடுபடுவதாக குற்றம்சாட்டி ஒரேயடியாக அவற்றுக்கு தடை விதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.கடந்த பிப்ரவரி மாதம் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 2010-இன் கீழ் 6 என்.ஜி.ஓக்களின் எப்.சி.ஆர்.ஏ உரிமம் ரத்துசெய்யப்பட்டது. இவற்றில் நார்தர்ன் எவஞ்ஜெலிக்கல் லுதெரன் சர்ச். எக்ரியோசோகுலிஸ் நார்த் வெஸ்டர்ன் கோஸ்நர் எவஞ்ஜெலிக்கல், நியூ லைப் பெல்லோஷிப் அசோசியேஷன், எவஞ்ஜெலிக்கல் சர்ச்சஸ் அசோசியேஷன் ஆகிய நான்கு என்ஜிஓ-க்கள் கிறிஸ்தவ என்.ஜி.ஓ.க்கள்ஆகும்.

அதன் தொடர்ச்சியாக தற்போது, ஜார்க்கண்ட் மாநிலத் தில் பழங்குடி மக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக 13 என்.ஜி.ஓ.க்கள் மற்றும்சங்கங்களின் உரிமத்தை ரத்து
செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த என்.ஜி.ஓக்களின் வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது.

;