tamilnadu

img

வலைப்பதிவு... பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் தலைவர்கள் இராமர் கோவில் திட்டத்தை ஆதரிப்பு...

விடுதலைப் போராளிகம்யூனிஸ்ட் கட்சியின் சிற்பிமீரட் சதி வழக்கில் ‘குற்றவாளி’விவசாயிகள் சங்கத்தின் தலைவர்ஏ.ஐ.டி.யூ.சி. உதவி தலைவர்கணசக்தி பத்திரிக்கை தொடங்கி யவர்காகா பாபு என அன்புடன் அழைக்கப்படுபவர்
மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்தோழர் முசாபர் அகமது அவர்களின் 132வது பிறந்த தினத்தில் மக்களுக்காக வாழ்வை அர்ப்பணிக்க உறுதியேற்போம்.

-மேற்குவங்க தோழர் சுஷோவன் பத்ரா

----------------

வட இந்தியாவில் உள்ள பெரும் பான்மையான பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் தலைவர்கள் இராமர் கோவில் திட்டத்தை ஆதரிப்பர். இதன் அரசியல் முக்கியத்துவம் என்ன எனில் “கமண்டல்” “மண்டலை” அமுக்கிவிட்டது. மண்டலை அதாவது பிற்படுத்தப்பட்ட பிரிவினரை மீட்க புதிய சார்நிலை அரசியல் தேவைப்படுகிறது.

- பத்திரிக்கையாளர் எம்.கே.வேணு

------------

இட ஒதுக்கீடு தரத்தை பாதிக்கிறதுஎன்பது மோசடி. சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வுக்கு முன்பு2016ஆம் ஆண்டு மாணவர்கள்பெற்ற கட் ஆப் மதிப்பெண் விபரங் களின்படி, பொதுப் பிரிவினர் 199.50 மதிப்பெண்களையும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 199.25மதிப்பெண்களையும், பிற்படுத்தப் பட்ட பிரிவினர் (முஸ்லிம்) 198.75 மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 198.75 மதிப்பெண்களும், பட்டியலினத்தவர் 196.75 மதிப்பெண்களும் பெற்றிருந்தனர். ஆக, முற்படுத்தப்பட்ட வருக்கும் பிற்படுத்தப்பட்டவருக்கும் வேறுபாடு 0.25 தான்! சமூக பிரமிடில் கீழே உள்ள பிரிவினர் மேலேஉள்ளவர்களிடம் உள்ள பத்தில் ஒருபங்கு  வசதிகளைத் தான் பெற்றுள்ளனர். எனினும் இணையான மதிப்பெண்கள் பெறுகின்றனர். இது நீட்வருவதற்கு முன்பு. நீட் மோசமானது.

- சுரேஷ் சம்பந்தம்

&&&&&&&&&&&&&&&

தொகுப்பு : அ.அன்வர் உசேன்

;