tamilnadu

img

நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்கு மதிப்பீட்டில் கேரளா முதலிடம்!

நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்கு மதிப்பீட்டில் கேரள மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடும் நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) திட்டத்தில் 2019 மதிப்பீடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பட்டினியை ஒழிப்பது மற்றும் பாலினச் சமத்துவம் என்ற புலங்களில் பெரும்பாலான மாநிலங்களுமே பின் நிலையில்தான் உள்ளன. ஆனால் நிதி ஆயோக் மொத்தமாக இந்தியாவுக்கு 60 புள்ளிகள் வழங்கியிருக்கிறது. தூய எரிவாயு, சுகாதாரம், அமைதி, நீதி, வலுவான நிறுவனங்கள் ஆகிய அடிப்படையில் நிதி ஆயோக் இந்தியாவுக்கு 60 புள்ளிகள் வழங்கியுள்ளது.

வறுமை ஒழிப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைவின்மை ஆகிய குறியீடுகளில் கோவா 75 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க, கேரளா, மிசோரம், நாகாலாந்து, அருணச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் 65க்கும் கூடுதலாக மதிப்பெண்கள் பெற்றுள்ளன. 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 50க்கும் குறைவாகவே இதில் மதிப்பெண் பெற்றுள்ளன. பீகார், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இதே குறியீட்டில் 30-க்கும் கீழ்தான் மதிப்பெண் பெற்றுள்ளன. 

அதே போல் பாலின சமத்துவத்தில் பெரும்பாலான மாநிலங்கள் பின் தங்கியே உள்ளன. ஆனால் இதிலும் கேரளா எப்படியோ 50 புள்ளிகளுக்கும் அதிகமாகப் பெற்றுள்ளது. இந்தக் குறியீட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண் பாலினத்துக்கு எதிரான குற்றங்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு, பெண்கள் அரசியல் பொருளாதார அதிகாரம் வழங்கல் ஆகியவை அடங்கும், எனவே பெண்கள் முன்னேற்றத்திலும் கேரளா 50க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளது.

;