tamilnadu

img

நீதிபதி லோயா மரணம் குறித்து மறுபரிசீலனை: சரத்பவார்

மும்பை:
நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்திய நீதிபதி லோயா மரணம் குறித்து மறுபரிசீலனை செய்யமகாராஷ்டிர அரசு தயார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்தார்.பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக இருந்த செராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை சிபிஐ விசாரித்தது. இந்த வழக்கு நடந்துவந்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா 2014 டிசம்பர் 1ஆம் தேதி மரணமடைந்தார். மருத்துவரான நீதிபதி லோயாவின் சகோதரி மருத்துவ அறிக்கை மற்றும் மரணம் நிகழ்ந்த பின்னணியை அடிப்படையாக கொண்டு சந்தேகம் எழுப்பினார். இந்த மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்களை போக்குமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். இதுகுறித்த மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ள மூன்று கட்சி கூட்டணி அரசின் நிலைப்பாட்டை தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் தெளிவுபடுத்தியுள்ளார். இது பாஜகவுக்கு கவலையளிப்பதாகும். லோயா மரணத்தில்மறுபரிசீலனை தேவை என்கிற கோரிக்கை வலுப்பெற்றால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனமராத்தி தொலைக்காட்சிக்கு அளித்தபேட்டியில் சரத்பவார் தெரிவித் துள்ளார்.  

இதுகுறித்து பேட்டியில் அவர் கூறியதாவது: லோயாவின் மரணம் தொடர்பானசந்தேகம் போக்கும் வகையில் விசாரணை நடத்த அரசு தயார். அதற்கான கோரிக்கை வலுவடைந்தால் நிச்சயமாக அரசு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும். பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்த கோரிக்கை மீண்டும் எழுந்துவருவது கவனத்திற்கு வந்துள்ளது. லோயாவின் மரணம் தொடர்பான சந்தேகம் போக்க ஆழமான விசாரணை தேவைஎன மகாராஷ்டிர மக்கள் கருதுவதை ஊடகங்கள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உண்மை என்ன என்பது விசாரிக்கப்பட வேண்டும். குற்றசாட்டில் ஏதேனும் அடிப்படை இருந்தால் மீண்டும் விசாரணை நடத்தலாம். அடிப்படை இல்லாத குற்றசாட்டுகளை முன்வைப்பது சரியல்ல என தெரிவித்தார்.
2014இல் லோயா மரணமடைந்தார் என்றாலும் அதிலுள்ள சந்தேகமும் குற்றச்சாட்டுகளும் 2017இல் எழுப்பப்பட்டன. சொராபுதீன் வழக்கு தொடர்பாக லோயாவை சிலர் அணுக முயன்றதாக குடும்பத்தினர் தெரிவித்ததைத் தொடர்ந்தே அது குறித்த விவாதங்கள் எழந்தன. வழக்கு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். ஆனால் லோயாவின் மரணத்தில் மறுபரிசீலனை கோரி மும்பை வழக்கறிஞர் சங்கம் தாக்கல் செய்த மனுவை 2018 ஜுலையில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எப்படியிருந்தாலும் மீண்டும் கோரிக்கை வலுவடையும் பின்னணியில் என்சிபி தலைவரின் நிலைப்பாடு முக்கியமானது.

;