tamilnadu

வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

மும்பை, ஏப். 19-வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி, ஜெட்ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள், தில்லி மற்றும் மும்பையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடன்சுமை மற்றும் நிதி நெருக்கடியால் ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் முடங்கியுள்ளது. ஏற்கெனவே 4 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படாத நிலையில், 16 ஆயிரம்ஊழியர்களின் வேலை கேள்விக்குள்ளாகி இருக்கிறது.இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தங்களை இக்கட்டில் நிறுத்தியிருப்பதாக மும்பை விமான நிலையத்தில் போராட்டத் த்தில் ஈடுபட்ட ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தையும், தங்கள் குடும்பங் களையும் காப்பாற்றுமாறு அவர்கள் முழக்கமிட்டனர். தில்லியிலும் ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மும்பை, தில்லி விமான நிலையங்களில் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ஸ்லாட்டுகளையும், வழித்தடங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஏர்இந்தியா, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன.இதேபோல, ஜெட்ஏர்வேஸ் விமானங்களை குத்தகை அடிப்படையில் பயன்படுத்தவும் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

;