தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கு மாவட்ட வாரியாக காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: சாலை ஆய்வாளர்
மொத்த காலியிடங்கள்: 149
மாவட்ட வாரியாக காலியிட விபரம் மற்றும் இணையதள முகவரி:
1. கரூர் – 03 (www.karur.nic.in)
2. சேலம் – 09 (www.salem.tn.nic.in)
3. புதுக்கோட்டை – 07 (www.pudukkottai.nic.in)
4. கிருஷ்ணகிரி – 10 (www.krishnagiri.nic.in)
5. திருப்பூர் – 12 (www.tiruppur.nic.in)
6. அரியலூர் – 06 (www.ariyalur.nic.in)
7. நாமக்கல் – 04 (www.namakkal.nic.in)
8. நீலகிரி – 03 (www.nilgirs.nic.in)
9. திருவண்ணாமலை – 11 (www.tiruvannamalai.nic.in)
10. தூத்துக்குடி – 23 (www.thoothukudi.nic.in)
11. நாகப்பட்டினம் – 12 (www.nagapattinam.nic.in)
12. தேனி – 14 (www.theni.nic.in)
13. கடலூர் – 20 (www.cuddalore.nic.in)
14. திருவாரூர் – 08 (www.tiruvarur.nic.in)
15. திருவள்ளூர் – 07 (www.tiruvallur.nic.in)
சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,000
வயது: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10- ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Civil Draughtsman படிப்பில் முழுநேர ITI படிப்பை படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விபரங்கள் அழைப்பு கடிதம் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் / ஒன்றிய பொறியாளரின் அறிவுரைப்படி சாலை மேம்பாட்டு பணிகளை மேற்பார்வையிடுதல், கான்கிரிட் போடுவதை கண்காணித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்படிவம் மற்றும் முழு விபரங்கள் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளவும். பின்னர் அதை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் சுய கையொப்பமிட்ட நகல்களை இணைத்து அந்தந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) அலுவலகத்திற்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்கவும் அல்லது நேரில் சமர்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
1. சேலம் மாவட்ட பணிகளுக்கு 17.2.2020.
2. கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்ட பணிகளுக்கு 20.2.2020.
3. இதர மாவட்ட பணிகளுக்கு 23.2.2020.