tamilnadu

img

இது ஓர் நாளில் உருவானதல்ல!

கிட்டத்தட்ட ஒரு லட்சம் பிஎஸ் என்எல் ஊழியர்கள் கடைசி இரு மாத ஊதியமுமின்றி  ‘விருப்ப ஓய்வு’ என்கிற பட்டுக் குஞ்சரம் கட்டிய ‘கட்டாய ஓய்வில்’ நடுத்தெருவுக்கு துரத்தப்பட்டுள்ளனர். இதன் பொருள் ஒரு லட்சம் குடும்பங்கள் வாழ்வை இழந்துள்ளன. கொந்தளிக்க வேண்டிய சமூக உளவியல் மரத்துக் கிடக்கிறது.

ஏன்? ஏன்?
இது ஒற்றை நாளில் உருவான
தல்ல.

அரசு பள்ளி, அரசு மருத்துவமனை, அரசு போக்குவரத்து, அரசு நிறு வனங்கள், அரசு தொழிலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள்… என எல்லாம் மோசம், திறமையற்றவை, தர மற்றவை, ஊழியர்கள் சோம்பேறிகள், நிர்வாகிகள் ஊழல் பேர்வழிகள்  என கடந்த பதினைந்து இருபது ஆண்டு களுக்கு மேலாய் ஊடகங்கள் உடுக்கை அடித்ததன் விளைவு சமூக பொதுப்புத்தியில் அது உறைந்து போய்விட்டது. தனியார் திறமையின் மொத்த குத்தகை, லாபத்தின் மொத்த உத்தர வாதம் என பொதுப் புத்தியில் ஏற்றப்பட்ட பொய்மை இன்று அநீதி நடக்கும் போது செய்வதறியாது செய லற்றுக் கிடக்கச் செய்கிறது. இதில் சமூகப் பொறுப்பற்ற அரசு சார் ஊழியர்களின் செயல்பாடுகள் பெரும் பங்காற்றின; இன்னும் சொல்லப் போனால் வேலைக்கு உத்தர வாதம் உள்ளது‘ பூஜாரியாக இருக்கும் வரை மணியாட்டிக் கொண்டிருந்தால் போதும்; காணிக்கையில் கண் வைத்தால் போதும், ‘என்கிற ஊழியர் உளவியல் அரசுத்துறையை பொதுத்துறையை அழிக்க நினைத்தோ ருக்கு பெரும் வாசலைத் திறக்க உள வியல் வழி செய்தது. இப்போது நடுத் தெருவுக்கு விரட்டுகிறது.

எந்த தனியார் நிறுவனமாவது ஒழுங்காக வரி கட்டி இருக்கிறதா? வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தி யிருக்கிறதா? ஊழியர் நலனை காத்தி ருக்கிறதா? வியாபாரக் கழுத்தறுப்புப் போட்டியில் இரக்கமற்று பழிவாங்கா மல் இருந்திருக்கிறதா? முதலில் சொன்ன வாக்குறுதி எதனையேனும் காப்பாற்றி இருக்கிறதா? சமூக அக்கறையோடு ஆபத்துக் காலத்தில் களத்தில் நின்றிருக்கிறதா?  இப்படி எழும் எந்தக் கேள்விக்கும், ‘இல்லை’ ‘இல்லை’ ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. வெள்ளத்தில் மும்பை தத்தளித்த போது ஓடோடி வந்தது அரசு மின் வாரியம் தானே தவிர; என்ரான் என்கிற தனியார் நிறுவனம் அல்ல. உலகெங் கும் இதுவே அனுபவம். ஆயினும் இதை எடுத்துச் சொன்ன ஊடகங்கள் எத்தனை?  உயிர் காக்கும் போராட்டத்தில் மக்க ளோடு நின்றவை தனியார் துறையா? அரசும், பொதுத் துறையுமா? இப்போ தேனும் கேட்க வேண்டாமா? இப்போதுகூட என்ன நடக்கும்? பல லட்சம் கோடி மதிப்புள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தை சில ஆயிரம் கோடிக்கு அம்பானிக்கு விற்கும் மோடி அரசு; அந்த சில ஆயிரம் கோடியையும் பொதுத்துறை வங்கி அம்பானிக்கு கடன் கொடுக்கும்; அதற்கு வட்டியோ அசலோ அவர் கட்ட வேண்டிய தில்லை; பின்னர் வராக் கடன் என தள்ளுபடி செய்துவிடும். ஆக பைசா செலவு இல்லாமல் பல லட்சம் கோடியை ஆட்டையைப் போடுவதே திறமை. மறுபக்கம் கட்டணம் தினசரி ஏறும். ஏன் எனக் கேட்கவும் முடி யாது. இப்போது நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது.

உழைப்பாளி மக்களே! 
ஆபத்தை அதன் சகல பரிமாணங்களோடும் அறிவீர்! 
சமூக அக்கறையோடு விழித்து எழுவீர்! 
இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை . 


 

 

;