tamilnadu

img

14 சர்வதேச செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

ஸ்ரீஹரிகோட்டா:
14 சர்வதேச செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.இஸ்ரோ நிறுவனம் வணிக ரீதியிலும்  விண்கலங்களை செலுத்தி வருகிறது. 2017 ஆம் ஆண்டில் ஒரே ராக்கெட்டில் பல நாடுகளுக்குச் சொந்தமான 104 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தி சாதனை படைத்தது. இதனால்  விண்வெளி வணிகச்சந்தையில் இந்தியா முக்கிய இடத்தை  பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் பி.எஸ்.எல்.வி-சி47, சி48 மற்றும் சி49 ஆகிய மூன்று ராக்கெட்டுகள் மூலம் 4 சர்வதேச நிறுவனங்களுக்கு சொந்தமான 14 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது.  இந்த மூன்று ராக்கெட்டுகளிலும் இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்று இடம் பெற்றிருக்கும்.

;