tamilnadu

img

டிரம்ப் மிரட்டலுக்கு பணிந்து இந்திய மக்களை பணயம் வைப்பதா?

மோடி அரசுக்கு சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

 

புதுதில்லி, ஏப்.7- இந்தியாவை மிரட்டும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, டிரம்பின் மிரட்ட லுக்கு பணிந்து உயிர் காக்கும் மருந்து மற்றும் சாதனங்களை அமெ ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய மோடி அரசு முடிவெடுத்திருப்பதையும் கடு மையாக விமர்சித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பிலி ருந்து நாட்டை மீட்க பணம் இல்லை என்று கூறி நாடாளுமன்ற உறுப்பி னர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி யை ரத்து செய்து, அதை மடை மாற்றம் செய்திருப்பதையும் சீத்தா ராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

திராணியற்ற டிரம்ப்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அச்சுறுத்தலாக நீடித்துவரும் நிலையில் அமெரிக்கா மிகக் கடுமையான சூழலை எதிர் கொண்டுள்ளது. நியூயார்க் உள்ளிட்ட மிக முக்கிய நகரங்களில் ஒட்டு மொத்த மக்களும் மரணத்தின் பிடி யில் சிக்கி தவிக்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது. இந்நிலையை எதிர் கொள்ள திராணியற்ற டிரம்ப் நிர்வாகம், தனது மக்களை பாது காப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு பதிலாக, உலகின் பிற நாடுகளை குற்றம் சாட்டுவது, பழி சுமத்துவது, இக்கட்டான இந்த தரு ணத்தில் கூட பொருளாதார தடை களை நீட்டிப்பது, மிரட்டுவது என்ற இழிவான பாதையிலேயே பயணிக்கி றது. கொரோனா தொற்றை தடுக்க முடியாமல், அமெரிக்க ஏகாதிபத்தி யமும், உலக முதலாளித்துவமும் உல கின் முன்பு அம்பலப்பட்டு நிற்கின்றன.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஏப்ரல் 7 மாலை 5 மணி நில வரப்படி 3,67,659 பேராகவும், மரணம் 10,943 ஆகவும் அதிகரித்துள்ள நிலை யில், இதன் தீவிரத்தை தடுத்து நிறுத்திட, வழி தெரியாமல், எத்த கைய மருந்துக்களை பயன்படுத்து வது என்று தெரியாமலும் டிரம்ப் அரசு திணறி வருகிறது.

சீனா, ரஷ்யா உள் ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு உத விக்கரம் நீட்டியுள்ளன. எனினும், சீனா விலும், தற்போது இத்தாலியிலும், வேறு சில நாடுகளிலும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பிரதான இடம் பிடித்துள்ள கியூபாவின் மருந்தான இன்டர்பெரான் ஆல்பா 2பி என்ற மருந்தை, கியூபா மீதான தடைகளை ரத்து செய்து பெற்று கொண்டு, தனது மக்களை காப்பதற்கு பதிலாக, கொரோனா மரணங்களை தடுத்து  நிறுத்தும் என்று எந்தவிதத்திலும் நிரூ பிக்கப்படாத, உறுதி செய்யப்படாத பல மருந்துகளை வெவ்வேறு நாடு களிலிருந்து வாங்குவதற்கும், இறக்குமதி செய்வதற்கும் டிரம்ப்  நிர்வாகம் முயற்சித்து வருகிறது.  இதன் பின்னணியில் இருப்பது கியூபா உள்ளிட்ட நாடுகள் மீதான தீராத வன்மமே தவிர, செத்து விழும் அமெரிக்கர்களை பாதுகாக்கும் எண்ணம் அல்ல என்பது தெளிவாகி றது. இத்தகைய பின்னணியில்தான், இந்தியாவிடமிருந்து ஹைட்ரோ குளோரோகுயின் என்ற மருந்தினை அனுப்புமாறு கேட்டு டிரம்ப் நிர்வா கம் கடந்த சில நாட்களாக நச்சரித்து வருகிறது.

ஹைட்ரோகுளோரோகுயின் என்பது மலேரியாவுக்கான மருந்தா கும். இது கொரோனா மரணத்தை தடுப்பதாக நிரூபிக்கப்படவில்லை என்று அமெரிக்க மருத்துவர்கள் நிரா கரித்துவிட்டதாக 10 நாட்களுக்கு முன்பே நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட  ஏடுகளில் விரிவான விபரங்கள் வெளி யாகிவிட்டன. ஆனாலும் கூட, வெளி நாடுகளிலிருந்து மருந்துக்களை பெறுவதில் முனைப்பாக இருக்கி றோம் என்று அமெரிக்க மக்களி டையே காட்டி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் டிரம்ப்புக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலை

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் சுகாதார அபா யம் ஏற்பட்ட பின்னணியில் இது போன்ற பல்வேறு உயிர் காக்கும் மருந்துக்கள் மற்றும் முக கவசங்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்நாட்டி லேயே பற்றாக்குறையாக இருக்கும் போது இன்னும் ஏன் ஏற்றுமதி செய்கி றீர்கள் என்று கடந்த மார்ச் 24 அன்று இரவு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் மத்திய அரசை விமர்சித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச் சூரி சுட்டிக்காட்டி இருந்தார். அடுத்த நாளே, மார்ச் 25 அன்று ஹைட்ரோ குளோரோகுயின் உள்பட முக்கிய மருந்துக்கள், மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை ரத்து செய்து மத்திய அரசு உத்தர விட்டது. இதனால், அமெரிக்கா உள் ளிட்ட நாடுகளுக்கும் அவர்கள் அதற்கு சில நாட்களுக்கு முன்பே கேட் டிருந்த போதிலும் இந்த மருந்துக் களை ஏற்றுமதி செய்வது நிறுத்தப் பட்டது. இதை கேட்டுத்தான் இப் போது டொனால்ட் டிரம்ப் மோடி அரசை மிரட்டியுள்ளார். ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தை அனுப்ப வில்லை என்றால் கடும் விளைவு களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று பகிரங்கமாக இந்தியாவை அவர் மிரட்டியுள்ளார். இதற்கு இந்திய அரசி யல் அரங்கிலும், மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்திய மக்களின்  உயிர் முக்கியம்

இதுதொடர்பாக, டுவிட்டரில் பதி விட்டுள்ள சீத்தாராம் யெச்சூரி, “அமெரிக்க ஜனாதிபதியின் மிரட்டல் அறிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் மோடி அரசு அவரது மிரட்டலுக்கு பணிந்து விட்டது. மருந்துக்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்திருக்கிறது. பிரத மர் நரேந்திரமோடி கடந்த மாதம் தான் இந்தியாவுக்கு டிரம்ப்பை அழைத்து வந்து மிகப் பெரிய விழாக்கோல மாக மாற்றினார். அந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு துவங்கிவிட் டது. அதில் கவனம் செலுத்தாமல் டிரம்ப்பை வரவேற்ற போதிலும், இப் போது டிரம்ப்பிடமிருந்து மிரட்டலே பரிசாக கிடைத்திருக்கிறது. டிரம்ப்பின் மிரட்டலுக்கு பணிந்தி ருப்பதன் மூலம் இவர்களது “தேசிய வாதம்” என்ற பிரச்சாரம் எத்தனை போலியானது என்பதும் அம்பலமாகி விட்டது. நம்மையெல்லாம் வீடுகளில் விளக்குகளையும், மெழுகுவர்த்தி களையும் ஏற்ற சொல்லிவிட்டு, கொரோனாவுக்கு எதிரான போரில் மருந்துப் பொருட்களை டிரம்ப்புக்கு ஏற்றுமதி செய்து சமரசம் செய்து கொள்கிறார் மோடி” என்று சாடி யுள்ளார்.

“கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் முன்னுரிமை என்பது கட்டாயம் இந்திய மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து பாதுகாப்பதில்தான் இருக்க வேண்டும். மாறாக, முக்கியமான மருந்துக்களை டிரம்ப்பின் நிர்ப்பந் தித்திற்கு பணிந்து அனுப்பிவிட்டு, இந்திய மக்களை ஆபத்தின் பிடி யில் சிக்க வைக்கக் கூடாது. இந்திய மக்களின் உயிர்களை காக்கும் போராட்டத்தில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை” என்றும் சீத்தாராம் யெச் சூரி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற  உறுப்பினர் நிதி

மேலும், மத்திய அமைச்சரவை கூடி, கொரோனா பாதிப்பை எதிர் கொள்வதற்காக பல முடிவுகளை எடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது என்பதாகும். ஆனால் இந்த நிதியை நிறுத்தி வைத்து அதை மொத்தமாக எடுத்து அரசாங்கத்தின் தொகுப்பு நிதியத்திற்கு மடைமாற்றம் செய்வது என்று மத்திய அமைச்ச ரவை முடிவு செய்திருக்கிறது. 2020- 21 மற்றும் 2021-22 நிதியாண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7900 கோடியை நேரடியாக இப்போது கொரோனா பாதிப்புக்கான தேவைகளுக்கு பயன் படுத்தப் போவதில்லை. மாறாக அதை, தொகுப்பு நிதியத்திற்கு கொண்டு செல்வதன் மூலம், கடந்த 6 ஆண்டு காலமாக ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவை சீர்செய்வ தற்கு இதையும் பயன்படுத்தி கொள் வது என்ற நோக்கம்தான் வெளிப்படு கிறது என்று சீத்தாராம் யெச்சூரி விமர் சித்துள்ளார்.

மோடி அரசு, தொடர்ச்சியாக பொதுப் பணத்தை அப்பட்டமாக வீணாக்கியே வந்திருக்கிறது. பெரிய சிலைகள் எழுப்புவதிலும், சுய விளம்பர தம்பட்ட பிரச்சாரங்களுக் கும் மக்கள் நலன் சாராத விளம்பர நிகழ்ச்சிகளுக்குமே பொதுப் பணம் வாரியிறைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டு காலமாக பாஜக ஆட்சி யாளர்கள், நாட்டின் பொது சுகாதா ரத்தை முற்றாக அலட்சியப்படுத் தியே வந்திருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தை முறையாக மேலாண்மை செய்யத் தெரியாத இவர்களது நடவடிக்கைகளால்தான் மிகப் பெரிய நெருக்கடி சூழ்ந்தது. இப்போது அது மேலும் தீவிரமடைந் துள்ளது என்றும் சீத்தாராம் யெச்சூரி சாடியுள்ளார்.

கூட்டுக் களவாணிகளுக்குத் தர மட்டும் பணம் உள்ளதா?

மேலும், அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால், தில்லியில் தற் போது அறிவிக்கப்பட்டுள்ள பிரம் மாண்டமான - ஆனால் தேவை யில்லாத திட்டங்களை உடனடியாக ஏன் நிறுத்த மறுக்கிறீர்கள்? அதை விட உங்களுக்கு லட்சக்கணக்கான இந்திய மக்களின் உயிர் முக்கியம் என்று தெரியவில்லையா? பாரதிய  ஜனதா கட்சி பல்லாயிரம் கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் தனது கணக்குகளில் பெற்று பதுக்கி வைத்திருக்கிறதே, அதை இப்போது அரசின் செயல் பாடுகளுக்கு மாற்றிவிடலாமே? ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள்?

என்று கேள்விக்கணைகள் தொடுத்துள்ள சீத்தாராம் யெச்சூரி, பெரும் கார்ப்ப ரேட்களுக்கும் உங்களது கூட்டுக் கள வாணிகளுக்கும் ரூ.7.88 லட்சம் கோடி அளவிற்கு வங்கிக் கடன்களை தள்ளு படி செய்வதற்கு பணம் இருக்கிறது; ரூ.1.44 லட்சம் கோடி வரி சலுகைகள் அளிப்பதற்கு பணம் இருக்கிறது; இந்திய மக்களையும், கடந்த 2 வார காலமாக வேலையிழந்து நிற்கிற 5 கோடி எளிய மக்களின் குடும்பங் களையும் பாதுகாப்பதற்கு - கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு பணம் இல்லையா என்றும் கடுமை யாக சாடியுள்ளார்.

 

;