tamilnadu

img

விமர்சன உரிமையை உச்சநீதிமன்றமே நசுக்குவதா? முன்னாள் நீதிபதிகள் உள்பட 131 ஆளுமைகள் பகிரங்க கண்டனம்

புதுதில்லி:
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு எதிராக, தானாக முன்வந்து நீதிமன்றஅவமதிப்பு வழக்கை பதிவு செய்ததன் மூலம் உச்சநீதிமன்றம், விமர்சனம் செய்யும்உரிமையை நசுக்குவதாக முன்னாள் நீதிபதிகள் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த131 ஆளுமைகள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

“பழிவாங்கல், குற்றவியல் அவமதிப்புநடவடிக்கை போன்ற அச்சமின்றி ஒருநாட்டின் உச்சநீதிமன்றம் பொது விவாதத்தை முன்னெடுத்து செல்லும் சுதந்திர அமைப்பாக இருக்க வேண்டும்” என்றுஅறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.“கடந்த 6 ஆண்டுகளில் ஜனநாயக அழிப்பில் உச்சநீதிமன்றத்தின் பங்கு” என்றுகுறிப்பிட்டு, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த்பூஷண் கடந்த ஜூன் 27 அன்று டுவிட்டரில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் வழக்கை உச்ச நீதிமன்றம் கையாண்ட விதம், விசாரணை நடத்திய முறை குறித்தும், பீமா கோரேகான் வழக்கில் கைதாகியுள்ள சமூக செயற்பாட்டாளர் கள் வரவர ராவ், சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததையும், நீதிமன்றம் அதனைக் கண்டிக்காமல் இருப்பதையும் கேள்விக்கு உட்படுத்தி இருந்தார்.மேலும், “வரலாற்று அறிஞர்கள் எதிர்காலத்தில் திரும்பிப் பார்க்கும்போது, இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அவசரநிலையும் பிறப்பிக்கப்படாமலேயே ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அறிவார்கள். அதிலும் ஜனநாயகத்தை அழிப்பதில் உச்சநீதிமன்றத்தின் பங்கு என்ன என்பதையும்,அதிலும் குறிப்பாக 4 முன்னாள் தலைமைநீதிபதிகளின் (எஸ்.ஏ. பாப்டே, ரஞ்சன் கோகோய், தீபக் மிஸ்ரா, ஜே.எஸ். கேஹர்..)பங்கு குறித்து தெரியவரும்” என குறிப்பிட்டிருந்தார்.

இதற்காக உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷன் மீது தாமாகவே முன்வந்து நீதிமன்றஅவமதிப்பு வழக்கு தொடர்ந்து, தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்நிலையிலேயே, உச்ச நீதிமன்றத் தின் நடவடிக்கையைக் கண்டித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுர்,தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமைநீதிபதி ஏ.பி. ஷா, முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ராம்தாஸ், பொருளாதார நிபுணர் அஜித் ராணடே, பத்திரிகையாளர் பி. சாய்நாத், என்.ராம், மிருணாள் பாண்டே, வரலாற்றாசிரியர்கள் ராஜ் மோகன் காந்தி, ராமச்சந்திர குஹா, பேராசிரியர்கள் பிரபாத் பட்நாயக், அலோக் ராய்,பிருந்தாகாரத் (சிபிஎம்), து.ராஜா (சிபிஐ)மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்றஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் என 131 பேர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

“கடந்த சில ஆண்டுகளாக, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் அரசின் நடவடிக்கைகளை கண்டிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தயங்குவது பற்றி கேள்விகள் எழுந்துவருகின்றன. இந்த கேள்விகள், ஊடகங் கள், கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் போன்ற சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் எழுப் பப்படும் கேள்விகள் ஆகும். சமீபத்தில், பொது முடக்கநிலையில் எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்களின் நெருக்கடிகளுக்கு உரிய நேரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட தயக்கம் காட்டியசெயல் பொது விவாதமானது. அவ்வாறுஉச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட சில கவலைகளைதான் பூஷன் வெளிப்படுத்தினார். 

இந்நிலையில், பூஷனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தொடர்ந்த அவமதிப்பு நடவடிக்கைகள் நீதிமன்றத்தை விமர்சிப் பதை “தடுக்கும் முயற்சி” என்றே தோன்றுகிறது, நீதிமன்றம் அல்லது வெளியே நீதிபதிகளின் நடத்தை குறித்த விமர்சனத்திற்காகதண்டிக்கப்படுவோம் என்று- நீதிமன்றத் தின் தன்னிச்சையான அதிகாரத்திற்கு பயந்து குடிமக்கள் வாழும் ஒரு சூழ்நிலையை ஏற்க முடியாது.உண்மையில், அவமதிப்பு என்பது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்றபெரும்பாலான செயல்படும் ஜனநாயக நாடுகளில் ஒரு கிரிமினல் குற்றம் என்பதிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் கூட, அவமதிப்பு வழக்கைகண்மூடித்தனமாக பயன்படுத்துவதன் மூலம் நீதித்துறை மீதான விமர்சனத்தைத் தடுக்கக்கூடாது என்ற கொள்கை உச்சநீதிமன்றம் மற்றும் கல்வியாளர்கள் மற்றும் புகழ்பெற்ற வழக்கறிஞர்களால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.ஆகவே, நீதி மற்றும் நியாயத்தின் நலனுக்காகவும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் கவுரவத்தை நிலைநிறுத்துவதற்காகவும், பிரசாந்த் பூஷனுக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு குற்றச்சாட்டு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

;