tamilnadu

img

தனிநபர் வருமானத்தில் இந்தியாவை பின்னுக்கு தள்ளுகிறதா வங்க தேசம்

தனிநபர் வருமானத்தில் இந்தியாவை வங்க தேசம் பின்னுக்கு தள்ளும் சூழல் உள்ளது என ராகுல் காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். 
ஐஎம்எப் என்ற சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10 புள்ளி 3 சதவிகிதம் சரியும் என கூறப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை  முந்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் எம்.பி. தனது டுவிட்டரில் பாஜகவின் வெறுப்பு நிரம்பிய கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டு அருமையான சாதனை. வங்கதேசம் இந்தியாவை முந்தப் போகிறது”  என்று தெரிவித்துள்ளார்.