tamilnadu

img

பத்திரிகை அலுவலகத்தில் உள்ளே புகுந்து பாமகவினர் வன்முறை.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை:
மார்க்சிஸ்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிரு ஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்க ளவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மிகக் குறைவான அளவில் 15 சதவிகிதம் மட்டுமே வருகை தந்துள்ளார் என்றும், குடியுரிமை சட்டத்திருத்த சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தில் கலந்து கொள்ளாமல், வாக்கெடுப்பின் போது மட்டும் கலந்து கொண்டார் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டது.  இச்செய்தியை பொறுத்துக் கொள்ளா மல் ஆத்திரமடைந்த பாமகவினர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பாமகவின ரின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்து, நாடாளு மன்ற நடவடிக்கைகள், உறுப்பினர்கள் வருகைப் பதிவு, ஆற்றிய உரைகள், கேட்ட கேள்விகள், முன்மொழிந்த தீர்மானங்கள் - சட்ட முன்வடிவுகள் ஆகியவற்றைத் தொகுத்து பல்வேறு இதழ்கள் வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். அதன் அடிப்படையிலேயே அன்புமணி ராமதாஸ் 15 சதவிகிதம் அளவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளி யிட்டுள்ளது. இதில் தவறு இருந்தால், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எத்தனை நாள் கூட்டத்தில் பங்கேற்றார் - எத்தனை முறை உரையாற்றினார், எத்தனை கேள்விகளை எழுப்பினார் என ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி மறுப்பு செய்தி வெளியிடச் சொல்வது தான் ஜனநாயக நடவடிக்கையாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறோம்.

;