புதுதில்லி, பிப்.5- உத்தரப்பிரதேசத் தைச் சேர்ந்த இந்து மகா சபைத் தலைவர் ரஞ்சித் பச்சன், கடந்த ஞாயிற்றுக் கிழமை யன்று, 2 மர்ம நபர்களால் துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லப்பட் டார். முஸ்லிம் அமைப்பி னர்தான் இவரை கொன்ற தாக பாஜகவினர் கூறி வந்த நிலையில், தற்போது திடீரென ரஞ்சித்தின் இரண்டாவது மனைவி ஸ்மிருதியிடம் விசா ரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ரஞ்சித்தின் நெருங்கிய நண்பரான கோரக்பூர் வியாபாரி ஒருவரையும் விசாரிக்கத் திட்டமிட்டுள் ளனர்.