tamilnadu

img

பொருளாதாரத்தின் மீது இந்தியர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.... 100 புள்ளிகளுக்கு கீழே போன எதிர்கால எதிர்பார்ப்புக் குறியீடு

புதுதில்லி:
நாட்டின் பொருளாதாரம் மீது இந்திய மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று ரிசர்வ் வங்கி நடத்திய சர்வே-யில் தெரிய வந்துள்ளது.ஒற்றைப் படை மாதங்களில் (ஜனவரி, மார்ச், மே, ஜூலை, செப்டம்பர்,நவம்பர்) நுகர்வோர் நம்பிக்கை குறித்தசர்வே (Consumer Confidence survey) நடத்தி, அதனடிப்படையிலான அறிக் கைகளை வெளியிடுவது, ரிசர்வ் வங்கியின் நடைமுறை. தற்போதைய நிலைக் குறியீடு (Current Situation Index) மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புக் குறியீடு (Future Expectation Index) ஆகிய 2 அம்சங்களில் சர்வே நடத்தப்படும்.

பொது பொருளாதார சூழல், வேலைவாய்ப்பு நிலை, ஒட்டுமொத்த விலைவாசி நிலவரம், தனிநபர் வருமானம் மற்றும் செலவினம் ஆகியவைகுறித்து மக்களின் கருத்துகள், எதிர் பார்ப்புகள் ஆகிய விஷயங்கள் சர்வே-யில் எடுத்துக் கொள்ளப்படும்.அதன்படி, மே மாதத்திற்கான சர்வேமுடிவுகள் ஜூன் 4 அன்று வெளியாகி உள்ளன. இதில்தான், நுகர்வோர் நம்பிக்கை குறியீடு வரலாறு காணாத வகை யில் 63.7 புள்ளிகள் என்ற அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
கடந்த மார்ச் மாதத்தில் நுகர்வோர்நம்பிக்கை குறியீடு 85.6 புள்ளிகளாக இருந்த நிலையில், அது சுமார் 20 புள்ளிகள் அளவிற்கு தற்போது குறைந்துள்ளது.தற்போதைய இந்த நுகர்வோர் நம்பிக்கைக் குறைவு, மே மாதத்திற்கான நிலைமையாக மட்டுமல்லாமல். இந்தஆண்டு முழுவதற்குமே பொருளாதாரம் மேம்படும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு இல்லை என்று ரிவர்வ் வங்கி கூறியிருக்கிறது.அதாவது, எதிர்கால எதிர்பார்ப்புக் குறியீடு மே மாதத்தில் 97.9 புள்ளிகளாககுறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத் தில் எதிர்கால எதிர்பார்ப்பு குறியீடு100 புள்ளிகளுக்கும் கீழே போயிருப்பதுஇதுதான் முதல்முறை என்றும் சர்வேதெரிவிக்கிறது.

கொரோனா பாதிப்பின் விளைவாக ஏராளமானோர் வேலைவாய்ப்புகளைஇழந்து வருவதாலும், மேற்கொண்டுகூடுதலாக பலர் வேலைகளை இழக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாலும் குடும்ப செலவினம் குறையும் என்றுகூறியிருக்கும் ரிசர்வ் வங்கி, ஏற்கெனவேநுகர்வோர் தங்களது செலவுகளை குறைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள் ளது.இந்தியக் குடும்பங்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காக மேற் கொள்ளும் செலவுகளால்தான், தற் போதைய ஒட்டுமொத்த நுகர்வோர் செலவினம் ஓரளவுக்காவது நிலைத தன்மை பெற்றுள்ளதாகவும், வரும் மாதங்களில் விலைவாசி மிகப்பெரிய அளவிற்கு அதிகரிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.இந்தியப் பொருளாதாரம் 2020 - 21 நிதியாண்டில் மந்தநிலையை (Recession) நோக்கிச் செல்வதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், கடந்த மே மாதம் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

;