tamilnadu

img

இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு கடும் கண்டனம்

மின்துறையின் நிர்வாகப் பணியிலிருந்து  மாநில அரசுகளை நீக்கும் அறிவிக்கை வெளியீடு

லாபவேட்டை வர்த்தகர்களுக்கு ஆதரவாக மோடி அரசின் நடவடிக்கை

புதுதில்லி,ஏப்.22- நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத் தால் சூழப்பட்டிருக்கிற நிலையில் லாப வேட்டை வர்த்தகர்களுக்கு ஆதரவாக மோடி அரசின் எரிசக்தி துறையானது மின்சாரத் துறை யின் நிர்வாகப் பணியிலிருந்து மாநில அரசு களை விலக்கி வைக்கும் அறிவிக்கையை வெளி யிட்டுள்ளது. இதற்கு இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரசந்தா என் சௌத்திரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:

மத்திய அரசின் எரிசக்தித் துறை அமைச்ச கம் 17.04.2020 தேதியிட்ட அறிவிக்கையை எண் 42/6/2011-ஆர்&ஆர் (VOL-VIII) வெளியிட்டுள் ளது. மின்சாரத் துறையில் தனியார்மயமாக் கலை எவ்வளவு விரைவாக செயல்படுத்திட இய லுமோ அவ்வளவு விரைவாக செய்திட வேண்டும் என்பதோடு, மின்சாரத் துறையின் நிர்வாகப் பணி யிலிருந்து மாநில அரசுகளை விலக்கிட வேண் டும் என்ற அடிப்படை நோக்கத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பேரிடர் மேலா ண்மை சட்டம் -2005 பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இத்தருணத்தில் மத்திய அரசு தனது எரிசக்தித் துறை அமைச்சகத்தின் மூலம் மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கையை இந்திய மின்ஊழியர் கூட்ட மைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. 

அனைத்து அவசரமான பொதுப் பயன்பாடு களுக்கும் தங்குதடையின்றி சீராக தொடர்ந்து மின்சாரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ப தற்காக மின் உற்பத்தி, மின்கடத்தல் மற்றும் விநி யோகம் ஆகியவை தொடர்பான எரிசக்தி பயன் பாட்டு பணிகளுக்கு ஊரடங்கு நடவடிக்கையிலி ருந்து விலக்களித்து மத்திய உள்துறை அமைச்ச கம் விலக்களித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு துவங்கி மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகா தாரத் துறை அமைச்சகங்கள் கோவிட்-19 நோய் பரவுவதற்கு எதிராக கடுமையாகப் போராடி வரு கின்றனர். அதே நேரத்தில் நமது மருத்துவர்கள் அவர்களது குழுவினரான செவிலியர்கள், மருத் துவ-துணை மருத்துவப் பணியாளர்கள் மட்டு மின்றி துணை ஊழியர்களின் ஆதரவுடன் தங்க ளது மருத்துவனைகளில் போராடி வருகின்றனர். 

மருந்துப் பொருட்கள், ரசாயனம், நோய்க் கிருமிகளை அழிப்பதற்கான தடுப்பூசி, பரி சோதனைக் கூடங்கள் மற்றும் தனிநபர் பாது காப்பு கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகள் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விநி யோகத்தில் நமது சகோதார, சகோதரிகள் பணி யாற்றி வருகின்றனர். இவர்களது பணிகள் அனைத்தும் மின்சாரத்தை சார்ந்து இருக்கின் றன. தங்களது பாதுகாப்பை உத்தரவாதம் செய்து கொள்ளும் வகையில் மின்சாரத் துறையில் பணி யாற்றும் ஊழியர்களில் கணிசமானவர்களுக்கு தனிநபர் பாதுகாப்புக்கருவிகள் வழங்கப்பட வில்லை. குறிப்பாக ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு இக்கருவி கள் அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு காப்பீடு அளிக்கப்பட வேண்டும் என ஏப்ரல் 2 ஆம் தேதி யன்று எரிசக்தித் துறை அமைச்சரிடம் முன்வைக் கப்பட்ட வேண்டுகோள், இதுவரை அவரால் பரி சீலிக்கப்படவில்லை. இருந்தபோதும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும், கோவிட்-19 நோயை வெற்றி கொள்ள அனைத்து இந்தியர்களும் ஒன்று பட்டு இருப்பதையும் உத்தரவாதம் செய்யும் பணி யில் மின்சாரத் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வரு கின்றனர்.

இத்தகைய சூழலில், 2011 ஆம் ஆண்டிலி ருந்து பெரும்பாலான மாநில அரசுகள் உள்ளிட்ட அனைவராலும் (இதில் ஆர்வம் கொண்டுள்ள வர்த்தகர்களில் ஒரு பகுதியினர் நீங்கலாக) எதிர்க்கப்பட்டு வருகிற மின்சார (திருத்த) மசோதா, 2020-ஐ அறிவிக்க இதுவே சரியான தரு ணம் என மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் எண்ணியுள்ளது. இதன் மீதான கருத்துக்கள் 21 நாட்களுக்குள் – அதாவது 2020 மே 8 ஆம் தேதிக் குள் அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றை எதிர்த்த போரில் இரண்டாம் வரிசையில் நின்று செயல்பட்டு வருகிற மின்சாரத் துறை ஊழி யர்களால் அரசின் இத்தகைய அவசரத்தை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

இந்நோய்த்தொற்றை எதிர்த்த போராட்டத் தில் அனைத்து இந்தியர்களும் ஒருங்கிணைக் கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண் டும் என்ற பிரதமரின் கவலையும், அக்கறையும் நமது எரிசக்தித் துறை அமைச்சரால் உணரப்பட வில்லை. எரிசக்தி துறையினுள்ள நுழைய அனு மதிக்க வேண்டும் என கோரி வரும் லாப வேட்கை கொண்ட வர்த்தகப் பிரிவினரின் நலனைப் பற்றி மட்டுமே இவரது கவனம் உள்ளது.

மத்திய அரசின் எரிசக்தித் துறை அமைச்சகத் தின் இத்தகைய நடவடிக்கையை இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு எதிர்ப்பதோடு, வன்மை யாகக் கண்டிக்கிறது. மேலும், காலதாமதம் எது வுமின்றி இந்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என சம்மேளனம் உறுதியாகக் கோரு கிறது. அவ்வாறு திரும்பப் பெறுவதன் மூலம் இந்திய நாட்டிலும் உலகிலும் துயருற்று வரும் மக்களின் மீது குறைந்தபட்ச அக்கறையை மத்திய அரசின் எரிசக்தித் துறை அமைச்சரும் அவரது குழுவினரும் கொண்டுள்ளனர் என் பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.