tamilnadu

img

இந்தியப் பொருளாதாரம் உங்களுக்காக காத்திருக்காது... நியூயார்க்கின் ‘வால் ஸ்டிரீட்’ ஏட்டில் மோடிக்கு கடிதம்

புதுதில்லி:
இந்தியப் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகும் நிலையில், இந்தப் பிரச்சனைகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நியூயார்க் நகரிலிருந்து வெளியாகும் ‘தி வால் ஸ்டிரீட் ஜேர்னல்’ (The Wall Street Journal) பத்திரிகையில் பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

கிருஷ்ண மேமானி என்பவர் அந்தக்கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

தற்போது இந்தியாவில் பல விவகாரங்களை நீங்கள் கவனிக்க வேண்டியதுஉள்ளது, என்பதை நான் அறிவேன். ஆனால், எனது கருத்துப்படி இந்தியபொருளாதார மந்த நிலை பிரச்சனைகள் குறித்து கவனிக்க வேண்டியதையே உங்களின் முக்கியப் பணியாகபார்க்கிறேன். ஏனெனில், நீங்கள் எதிர் பார்த்த பொருளாதார வளர்ச்சியை விட,தற்போதைய உண்மையான வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. இதை மாற்றுவது அவசியமாகும்.தங்களுக்கு வந்துள்ள பல ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களில் இருந்து, தற்போது என்ன செய்ய வேண்டும்என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள். எனவே, நீங்கள் உடனடியாக மேலும் விவாதம் செய்வதை விடுத்து,நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.நடந்து முடிந்த தேர்தலில், மக்கள்உங்களுக்கு அறுதிப் பெரும்பான்மையை அளித்துள்ளனர். அதைக் கொண்டு நீங்கள் குறுகிய மற்றும் நீண்டகால கொள்கைகள் மூலம் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மற்ற பிரச்சனைகளை விட பொருளாதார மந்தநிலை முக்கியமானவை ஆகும். ஏனென்றால், மற்ற பிரச்சனைகள் உங்களுக்காக காத்திருக்கும். ஆனால்,பொருளாதாரப் பிரச்சனைகள் காத்திருக்காது.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

;