tamilnadu

img

உலகின் புதிய கொரோனா மையமாக மாறும் இந்தியா....

தில்லி 
உலகைத் தனது உள்ளங்கையில் வைத்து அச்சுறுத்தி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸை விரட்ட பெரும்பாலான நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தியும் கொரோனா கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. தினமும் தாறுமாறாகப் பரவிவருவதால் உலக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். 

இந்நிலையில், உலகின் புதிய கொரோனா மையமாக இந்தியா முளைத்துள்ளது. தினமும் 6000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 24 மணிநேரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகிவருவதால் இடத்துக்கு கொரோனவுக்கான உலகளாவிய பட்டியலில் இந்தியா 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.தற்போதைய நிலையில் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாகக் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 156 பேர் பலியாகியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். 

கடந்த ஒரு வாரகாலமாக அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பெரு ஆகிய நாடுகள் உலகின் கொரோனா மையமாக இருந்த நிலையில் அந்த பட்டியலில் இந்தியாவும் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

;