tamilnadu

img

கவனத்தில் வைக்க வேண்டிய நாடுகள் பட்டியலில் இந்தியா

புதுதில்லி:
கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவை வைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு, அங்குள்ள மதச் சுதந்திரத்துக்கான அமைப்பு ( US Commission of International Religious Freedom’s  - USCIRF) பரிந்துரை செய்துள்ளது.இதுதொடர்பாக மே மாதத்தின் துவக் கத்தில் அறிக்கை ஒன்றை அளித்துள்ள அந்த அமைப்பு, “2019-ஆம் ஆண்டு இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரானவன்முறை அதிகரித்துள்ளது; மதச் சுதந்திரம் குறைந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் அரசால் காப்பாற்றப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கும்பல் படுகொலைகள் (Mob Lynching), குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமாக அரங்கேறியுள்ளன. கும்பல் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இந்திய அரசு செயல்படவில்லை” என்று ஏராளமான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளது.சிஏஏ சட்டம் மூலம் முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்கவழிசெய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளஇந்த அமைப்பு, சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் போது, இது சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும் என்றுகூறியுள்ளது. கேரளா போன்ற மாநிலங்கள்இதை அமல்படுத்த மறுப்பு தெரிவித்துள்ளதையும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.சிஏஏ-வுக்கு எதிராக போராட்டங்கள் எழுந்த நிலையில், அப்போராட்டங்கள் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டதை பதிவு செய்துள்ள மதச் சுதந்திரத்திற்கான அமைப்பு, ‘போராட்டக்காரர்களை பிரியாணியால் அல்லாமல் துப்பாக்கிக் குண்டுகளால் பழி தீர்ப்போம்’ என உ.பி.பாஜக முதல்வர் ஆதித்யநாத் வெளிப்படையாகவே மிரட்டியதையும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு உரிமைகளை நீக்கி, கடுமையான கட்டுப்பாடுகளை இந்திய அரசு விதித்துள்ளது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தில்லியில் 2020 பிப்ரவரியில் ஏற்பட்டவன்முறையின்போது, இந்திய உள்துறைஅமைச்சகத்தின் கீழ் வரும் தில்லி காவல்துறை ஒருதலைபட்சமாகச் செயல்பட் டுள்ளது. என்.ஜி.ஓ-க்கள் நிதிகளைப் பெறுவதிலும்கூட இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன” என நீண்ட குற்றப்பட்டியலை வெளியிட்டுள்ளது.நிறைவாக, சர்வதேச மத சுதந்திரச்சட்டத்தின் கீழ் இந்தியாவை கண்காணிக்கத்தக்க நாடு என்று அமெரிக்க அரசுஅறிவிக்க வேண்டும். விதி மீறலில் ஈடுபடும் இந்திய அரசு நிறுவனங்கள், அதிகாரிகள் மீது தடைகள் விதிக்க வேண்டும்.அமெரிக்கத் தூதரகம் மற்றும் இந்தியவிசாரணை அமைப்புகள், அதிகாரிகள் உடனான செயல்பாடுகளை அதிகப் படுத்த வேண்டும்.

வன்முறை மற்றும் வெறுப்புப் பேச்சுகளைக் கண்காணிக்க சிவில் அமைப்புகளுக்கான நிதியுதவிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அமெரிக்க அரசு பரிந்துரைகளை அளித்துள் ளது.2002-ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்தபோது,சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்வன்முறைகள் அரங்கேறின. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அப்போது மோடி அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று மதச்சுதந்திரத்திற்கான இதே ஆணையம்தான் பரிந்துரை செய்திருந்தது. அதன்படியே இந்தியப் பிரதமர்ஆகும் வரையில் மோடிக்கு அமெரிக்கா ‘விசா’ வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.'

;