tamilnadu

img

இந்தியாவின் கடன் 87.6% வரை அதிகரிக்கும்... எஸ்பிஐ பொருளாதார ஆலோசகர் எச்சரிக்கை

புதுதில்லி:
இந்தியாவின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், 87.6 சதவிகிதம் என்ற அளவிற்கு அதிகரிக்கும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (State Bank Of India), முதன்மை பொருளாதார ஆலோசகரான முனைவர் சௌம்யா காந்தி கோஷ் கூறியுள்ளார்.

‘ஈகோவ்ராப்’ (Ecowrap) என்ற தலைப் பில் ஆய்வறிக்கை ஒன்றை செளம்யா காந்திகோஷ் தயாரித்து வெளியிட்டுள்ளார்.அதில்தான், 2020 - 21 நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், கடன் தொகை (Debt. to GDP Ratio) 87.6 சதவிகிதத்தை எட்டலாம் என்று கூறப்பட்டுள்ளது.அதாவது, கடந்த 2011 - 12 நிதி ஆண்டில்58.8 லட்சம் கோடி ரூபாயாகவும் (GDP ratio67.4%), 2019 - 20 நிதியாண்டில் 146.9 லட்சம் கோடி ரூபாயாகவும் (GDP ratio 72.2%) இருக்கும் கடன் 2020-21 நிதியாண்டில் 170 லட்சம் கோடி ரூபாயாக உயரும்; அப்படி உயர்ந்தால், அந்த கடன்தொகை, இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 87.6 சதவிகிதமாக இருக்கும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதேபோல வெளிநாட்டுக் கடன் (External Debt.) 6.8 லட்சம் கோடி ரூபாயாக (இந்திய ஜிடிபியில் 3.5 சதவிகிதம்) அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் நிதி பொறுப்பு மற்றும்பட்ஜெட் மேலாண்மை (Fiscal Responsibilityand Budget Management - FRBM) அமைப்பு,2022 - 23 நிதி ஆண்டுக்குள் இந்தியாவின் கடன்,அதன் ஒட்டு மொத்த ஜிடிபியில் 60 சதவிகிதம் வரை மட்டுமே இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. ஆனால், தற்போது இருக்கும் பொருளாதாரச் சூழலில், எப்ஆர்பிஎம் அமைப்பு நிர்ணயித்த இலக்கை அடைய 2022 - 23 நிதி ஆண்டில்இருந்து கூடுதலாக 7 ஆண்டுகள் (அதாவது 2029 - 30 வரை) ஆகலாம் என்று அறிக்கை கூறுகிறது. ஜிடிபி வளர்ச்சி அதிகரித்தால் மட்டுமே கடன் குறையும் என்றும் அது தெரிவிக்கிறது.
உள்நாட்டு உற்பத்தியை விட, கடன் குறைவாக இருந்தால் மட்டுமே, அந்த நாட்டுபொருளாதாரம் மேற்கொண்டு எந்த கடனும் வாங்காமல், பொருட்களை உற்பத்திசெய்யவோ, பொருட்கள் & சேவைகளை விற்று, கடன்களை திருப்பிச் செலுத்தவோ முடியும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் ஜிடிபி வீழ்ச்சியால் கடன் தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய ஜிடிபி வளர்ச்சி குறைவால் மட்டும், இந்தியாவின் கடன் 4 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என்று சவுமியா காந்தி கோஷ் கூறியுள்ளார். 

;