tamilnadu

img

ராணுவத்திற்காக அதிகளவு தொகையை செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடம்

ராணுவத்திற்காக அதிகளவு தொகையை செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.


SIPRI(Stockholm International Peace Research Institute) data என்ற நிறுவனம் உலக நாடுகள் தங்களின் ராணுவத்திற்கான செலவு செய்யும் தொகை குறித்ததான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையில் இந்தியா தனது ராணுவத்திற்கான செலவு தொகையை 3.1% அதிகரித்துள்ளதாகவும், இது உலக நாடுகள் தங்களின் ராணுவத்திற்காக செலவு செய்யும் மொத்த தொகையில் 3.7 சதவிகிதம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, ராணுவத்திற்கான செலவில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.


இந்த வரிசையில் அமெரிக்கா முதல் இடத்திலும், அதைத்தொடர்ந்து சீனா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் முறையே ராணுவத்திற்காக செலவு செய்யும் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இடம் பெற்றுள்ளன. உலக நாடுகள் தங்களின் ராணுவத்திற்காக செலவு செய்யும் மொத்த தொகையில் சீனா 14 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது எனவும், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 5 சதவிகித அளவிற்கு ராணுவத்திற்கான செலவை அதிகரித்துள்ளது எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


;