tamilnadu

img

இந்தியா- பிரேசில் இடையே 15 புதிய ஒப்பந்தங்கள்

புதுதில்லி, ஜன.25- இந்திய- பிரேசில் இடையே 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகி உள்ளன.  பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சொனாரோ நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் பிரேசில் எம்.பிக்கள் நான்கு பேர் மற்றும் வர்த்தக குழுவினரும் வந்துள்ள னர்.  தில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர்  மோடி, பிரே சில் ஜனாதிபதி மற்றும்  இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தியா - பிரேசில் இடையே ,சுகா தாரம், மருத்துவம்,  இணையதளப் பாதுகாப்பு, உயிரி எரிசக்தி, மருத்துவம், சுகாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ஒத்து ழைப்பை நல்குவது தொடர்பான 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தா கின. இதன் பின்னர் இருநாட்டு தலை வர்களும் கூட்டாக செய்தியாளர் களை சந்தித்தனர். அப்போது பிரே சில் ஜனாதிபதி கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா - பிரேசில் இடையேயான  உறவு புதிய உச்சத்தை எட்டும் என்று தெரி வித்தார்.

;