tamilnadu

img

பாலின சமத்துவத்தில் இந்தியாவுக்கு பின்னடைவு நேபாளம், வங்கதேசத்துக்கும் கீழ் 112-வது இடம்

புதுதில்லி, ஜன.5- பாலின சமத்துவத்தில் இந்திய மிகவும் பின்தங்கி நேபாளம், வங்க தேசத்துக்கு கீழாக 112 ஆம் இடத்தில் உள்ளதாக உலக பொருளாதார மன்ற ஆய்வு அறிக்கை தெரி வித்துள்ளது. 153 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2018.ல் இருந்த 108ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது (2019) மேலும் நான்கு நாடுகளுக்கும் கீழாக தள்ளப்பட்டுள்ளது. பெண்களின் சுகாதாரம், பொரு ளாதாரத்துறையில் பங்கேற்பு என்பதில் 150ஆவது இடத்துக்கு சென்றுள்ளது. சம ஊதியத்தில் 117 ஆவது இடமும், கல்வியில் 112 ஆவது இடமும் கிடைத்துள்ளது. பொரு ளாதார தன்னிறைவிலும் செயல்திறன் மற்றும் நிறுவனங்களில் பெண்கள் தலைமை பொறுப்புகளை அடைவதிலும் இந்தியாவின் நிலை பரிதாபகரமாக உள்ளது என அறிக்கை மதிப்பிடுகிறது. உலக பொருளாதார மன்றத்தின் முதல் ஆய்வு நடந்த 2006 இல் இந்தியா 98 ஆவது  இடத்தில் இருந்தது. ஐஸ்லாந்து, நார்வே, பின்லாந்து, சுவீடன் ஆகிய நான்கு நாடுகள்  பாலின சமத்துவத்தில் முதல் நான்கு  இடங்களை பிடித்துள்ளன. தற்போதைய சூழ்நிலை தொடர்ந்தால் பாலின சமத்துவ மின்மையை அகற்ற குறைந்தபட்சம் தொண்ணூற்றொன்பது ஆண்டுகள் ஆகும்  என உலக பொருளாதார மன்றம் கணித்து ள்ளது.

;