புதுதில்லி, அக். 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மகாராஷ்டிர மாநிலக்குழு சார்பாக, வர விருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்களும் தொகுதி களும் வருமாறு: 1.சோலாபூர் சென்ட்ரல் – நரசய்யா ஆதம் 2.கல்வான் (பழங்குடியினர்) – ஜே.பி. கேவிட் 3.நாசிக் மேற்கு – டாக்டர் டி.எல். கராத் 4.தாணு (பழங்குடியினர்) – வினோத் நிகோலே இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான முழக்கம் வருமாறு: • பாஜக-சிவ சேனைக் கூட்டணியை முறியடிப்பது; • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வலுவை அதிகரிப்பது; மற்றும் • மாநிலத்தில் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை நிறுவுவது. (ந.நி.)