tamilnadu

img

கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் நகரங்கள் உருவாகின... தமிழ் நாகரிகம் உருவான காலத்தை பள்ளி பாடப்புத்தகங்களில் மாற்றம் செய்திடுக:

புதுதில்லி:
தமிழ் நாகரிகம் உருவான காலத்தை பள்ளி பாடப்புத்தகங்களில் கி.மு ஆறாம் நூற்றாண்டு என மாற்ற செய்திடவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்கவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சு.வெங்கடேசன் பேசியதாவது:தமிழக அரசு இந்த ஆண்டு கீழடியில் நடத்திய தொல்லியல் அகழாய்வில் கீழடியினுடைய காலம் கி.மு. ஆறாம்நூற்றாண்டு என்று  மெய்ப்பித்திருக்கிறது. மாநிலங்களவையில் பேசிய மத்தியஅமைச்சரும் இதனை உறுதிப்படுத்தி யிருக்கிறார். என்சிஇஆர்டியின் ஆறு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களில் தமிழ் நாகரிகத்தின் சங்ககாலத்தினுடைய காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று உள்ளது. அவற்றை கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்று வருகிற கல்வி ஆண்டில் மாற்ற வேண்டும்.என்சிஇஆர்டியின் பல பாடங்களில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே கங்கை கரையில் பெரிய நகரங்கள் உருவாகிவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி குறிப்பிடப்பட்டிருக்கிற இடங்களில் எல்லாம் கங்கைக்கரையில் பெரு நகரங்கள் உருவான அதே காலத்தில் வைகைக் கரையிலும் தமிழகத்தின் நதிக்கரையிலும் நகரங்கள் உருவாகிவிட்டன என்று குறிப்பிட வேண்டும். தமிழகத்தின் நதிக்கரையில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் உருவான நகரங்கள் எழுத்தறிவு பெற்ற நகரங்களாக இருந்தன என்பதை மிக முக்கியமாக குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். 

;