tamilnadu

img

சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு குறையுமாம்... நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. புரளி

புதுதில்லி:
சமஸ்கிருதம் பேசினால் நரம்பு மண்டலம் சீராகும், உடலில் சர்க்கரை, கொழுப்பின்அளவு குறையும் என கணேஷ் சிங் என்ற மத்தியப்பிரதேச பாஜக எம்.பி. ஒருவர், நாடாளு மன்றத்தில் கட்டுக்கதை ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார்.அத்துடன் அவர் நிறுத்தவில்லை. சமஸ்கிருத மொழியில் கம்ப்யூட்டர் புரோகிராமிங் (Programming Languages) செய்தால், கணினிக்கு எந்தவித பிரச்சனையும் (வைரஸ் தாக்காது) ஏற்படாது என்று அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’வே கூறியிருக்கிறது; இஸ்லாமிய மொழிகள் உட்பட உலகில் 97 சதவிகிதத்திற்கும் அதிகமான மொழிகள் சமஸ்கிருதத்தையே அடிப்படையாகக் கொண்டவை என்றும் கணேஷ் சிங் கதையடித்துள்ளார்.கணேஷ் சிங்கைப் பார்த்த மத்திய அமைச்சர் பிரதாப் சிங் சாரங்கி, அவர் பங்கிற்கு மேலும் சில கதைகளை எடுத்து விட்டுள்ளார். சமஸ்கிருத மொழி மிகவும் நெகிழ்வானது; ஒரே ஒரு வாக்கியத்தை பல வழிகளில் பேச முடியும் என்றும், பிரதர், கவ் (Brother, Cow) போன்ற பல்வேறு ஆங்கிலச் சொற்களே சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவைதான் என்றும் ‘கண்டுபிடிப்பு’களை வெளியிட்டுள்ளார்.பாஜக எம்.பி. மற்றும் அமைச்சரின் இந்த பேச்சுக்கள் நாடு முழுவதும் படித்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

;